நகராட்சிகளில் நிதி நெருக்கடியால் வரி வசூல் தீவிரம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
நகராட்சிகிளல் வரி வருவாய் மூலம் திட்ட பணிகள், பணியாளர்கள் சம்பளம் மேற்கொள்ளப்பட்டன. கடந்த காலங்களில் வரி வசூலில் தேக்கம் நிலவியதால் தற்போது நிதிநெருக்கடியில் தவிக்கின்றன. எல்லாவற்றிற்கும் அரசு மானியம், கடன் பெறும் நிலையில் நிதி நிலைமை பல நகராட்சிகளில் மோசமாக உள்ளன. ஆனால் நகராட்சிகளுக்கு வர வேண்டிய குத்தகை, வாடகை, வரிகள் பல கோடி நிலுவையில் உள்ளன. உதாரணத்திற்கு
 நகராட்சிகளில் நிதி நெருக்கடியால் வரி வசூல் தீவிரம்



நகராட்சிகிளல் வரி வருவாய் மூலம் திட்ட பணிகள், பணியாளர்கள் சம்பளம் மேற்கொள்ளப்பட்டன. கடந்த காலங்களில் வரி வசூலில் தேக்கம் நிலவியதால் தற்போது நிதிநெருக்கடியில் தவிக்கின்றன.

எல்லாவற்றிற்கும் அரசு மானியம், கடன் பெறும் நிலையில் நிதி நிலைமை பல நகராட்சிகளில் மோசமாக உள்ளன. ஆனால் நகராட்சிகளுக்கு வர வேண்டிய குத்தகை, வாடகை, வரிகள் பல கோடி நிலுவையில் உள்ளன.

உதாரணத்திற்கு தேனி நகராட்சியில் ஆண்டுக்கு ரூ.20 கோடி வரி வசூலிக்க வேண்டியதில் மிக குறைந்த தொகை வசூல் ஆகியுள்ளது. மற்ற நகராட்சிகளிலும் இதே நிலை உள்ளது.

இதனையறிந்த நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் வரி வசூல்களை தீவிரப்படுத்திடவும், வரி வசூலில் பழைய நடைமுறைகளை ஏப், நவ, என ஆண்டுக்கு இருமுறை வசூல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். 2022 ஏப்ரல் முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வரி வசூலிக்கவும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை மாதந்தோறும் 5ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

செலுத்தாவிட்டால் அபராதம் 18 சதவீதம் சேர்த்து வசூலிக்க உத்தரவிட்டுள்ளார். தினமும் வரி வசூல் ஒவ்வொரு நகராட்சிக்கு தினமும் வசூலிக்க வேண்டிய தொகை இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

அன்று மாலை காணொலியில் வசூல் விபரம் சேகரிக்கின்றனர். இதனால் நகராட்சிகளில் வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

நகராட்சி வாடகை பாக்கி உரிய தேதியில் செலுத்தாதவர்களுக்கு தண்ட தொகை என 18 சதவீதம் வசூலிக்க கடைநடத்துபவர்களுக்கு நகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.


எதிர்ப்பு



தேனி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் நடேசன் கூறுகையில், 'தேனி நகராட்சியில் 200 கடைகளுக்கு வாடகை வசூலிக்கப்படுகிறது.

வியாபாரிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரிரு நாட்கள் தாமதம் ஆகலாம்.

இதற்காக ஆங்கிலேயயேர் ஆட்சி காலத்தில் பின்பற்றிய தண்ட தொகை சட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தி 18 சதவீத அபராம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும். இது தொடர்ந்தால் வியாபாரிகள் கடையடைப்பு போராட்ட நடத்த முடிவு செய்துள்ளோம்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X