புறவழிச்சாலையை களமாக பயன்படுத்தும் விவசாயிகள் கூடலுாரில் விபத்து அபாயம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
கூடலுார்,-கூடலுார் புறவழிச்சாலையை விவசாயிகள் களமாக பயன்படுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கூடலுார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மானாவாரி,தோட்ட விவசாயம் அதிகம் உள்ளது. மொச்சை, அவரை, தட்டபயிறு, எள் உள்ளிட்ட பயிர்கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது.விளை பொருட்களை களத்திற்கு கொண்டு சென்று உலர்த்தும் பணிகளையும், காயவைத்து பயிறுகளை தரம் பிரிக்கும்
 புறவழிச்சாலையை களமாக பயன்படுத்தும் விவசாயிகள் கூடலுாரில் விபத்து அபாயம்



கூடலுார்,-கூடலுார் புறவழிச்சாலையை விவசாயிகள் களமாக பயன்படுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கூடலுார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மானாவாரி,தோட்ட விவசாயம் அதிகம் உள்ளது. மொச்சை, அவரை, தட்டபயிறு, எள் உள்ளிட்ட பயிர்கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது.

விளை பொருட்களை களத்திற்கு கொண்டு சென்று உலர்த்தும் பணிகளையும், காயவைத்து பயிறுகளை தரம் பிரிக்கும் பணியிலும் மேற்கொள்வார்கள்.

இதில் சில விவசாயிகள் புறவழிச்சாலையை களமாக பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் வாகனங்கள் எப்போதும் வேகமாக செல்லும்.

இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது சபரிமலை சீசனால் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களும் அதிகமாக வருகின்றன.

இந்த நேரத்தில் புறவழிச் சாலையை களமாக பயன்படுத்துவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X