மூணாறில் நிலச்சரிவு குறித்து பிரிட்டன் பல்கலை ஆய்வு

Added : நவ 25, 2022 | |
Advertisement
மூணாறு: மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பிரிட்டனைச் சேர்ந்த பல்கலை கழக நிபுணர் குழு ஆய்வு நடத்துகின்றனர்.மூணாறிலும், சுற்றுப் பகுதிகளிலும் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து நிலச்சரிவு, மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றனர். அவற்றை குறித்து ஆய்வு நடத்துவதற்கு பிரிட்டனைச் சேர்ந்த நோட்டிங்ஹாம் பல்கலை கழக நிபுணர் குழு மூணாறுக்கு வந்தனர்.பல்கலை கழக புவியியல் போராசிரியர்
மூணாறில் நிலச்சரிவு குறித்து  பிரிட்டன் பல்கலை ஆய்வு

மூணாறு: மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பிரிட்டனைச் சேர்ந்த பல்கலை கழக நிபுணர் குழு ஆய்வு நடத்துகின்றனர்.

மூணாறிலும், சுற்றுப் பகுதிகளிலும் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து நிலச்சரிவு, மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றனர். அவற்றை குறித்து ஆய்வு நடத்துவதற்கு பிரிட்டனைச் சேர்ந்த நோட்டிங்ஹாம் பல்கலை கழக நிபுணர் குழு மூணாறுக்கு வந்தனர்.

பல்கலை கழக புவியியல் போராசிரியர் கிறிஸ்டியன் அன்ஹார்ட், கேரளா பல்கலை கழக புவியியல் உதவி பேராசிரியர் சஜின் குமார், நிகில் நெடும்பள்ளிவாசு ஆகியோர் தலைமையில் கேரளா பல்கலை., பாலக்காடு ஐ.ஐ.டி., ஆந்திரா பல்கலை., கோவா பொறியியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு நடத்துகின்றனர்.

மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்ட அரசு கல்லூரி, ராஜமலை பெட்டிமுடி, பழைய மூணாறு, குண்டளை புதுக்கடி ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்துகின்றனர். நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட காரணங்கள், அப்போது ஏற்படும் வெள்ளப் பெருக்கு ஆகியவற்றை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வு நடத்தப்படுகிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X