போடி,-போடி சிலமலை மெயின் ரோட்டில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கு செல்லும் ரோட்டில் கற்கள் கொட்டி மண் மேவப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் சீரமைப்புப் பணிகள் கிடப்பில் உள்ளன.
போடி ஒன்றியம், சிலமலை மெயின் ரோட்டில் அம்மாபூங்கா உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கு செல்லும் பாதை வசதி இல்லை. மண் பாதையாக இருந்தது. மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சிலமலை மெயின் ரோட்டில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி வரை ரோடு அமைக்க ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் உள்ளன. மழை பெய்யும் போது மண் அரிப்பு ஏற்பட்டு கற்கள் பெயர்ந்து நடந்து செல்ல முடியாத நிலையில் குண்டும், குழியுமாக உள்ளன.
இதனால் மாணவர்கள், பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.