கூடலூர் நகராட்சி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வரி வசூல்

Added : நவ 25, 2022 | |
Advertisement
கூடலுார்-கூடலுார் நகராட்சியில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வரி வசூலில் ஈடுபட்டனர். குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை துண்டிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.கூடலுார் நகராட்சியில் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குப்பை வரி உள்ளிட்டவைகளை ஏராளமானோர் நகராட்சிக்கு செலுத்தாமல் உள்ளனர். நகராட்சி மண்டல இயக்குனர் அலுவலகத்தில் இருந்து 100 சதவீத
 கூடலூர் நகராட்சி அதிகாரிகள்  வீடு வீடாகச் சென்று வரி வசூல்



கூடலுார்-கூடலுார் நகராட்சியில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வரி வசூலில் ஈடுபட்டனர். குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை துண்டிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கூடலுார் நகராட்சியில் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குப்பை வரி உள்ளிட்டவைகளை ஏராளமானோர் நகராட்சிக்கு செலுத்தாமல் உள்ளனர்.

நகராட்சி மண்டல இயக்குனர் அலுவலகத்தில் இருந்து 100 சதவீத வரி வசூல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நிலுவையில் உள்ள வரிகளை பொதுமக்கள் விரைவில் செலுத்த வேண்டும் என நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. இருந்தபோதிலும் பலர் வரிகள் செலுத்தவில்லை.

இந்நிலையில் நேற்று நகராட்சி கமிஷனர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி, மேலாளர் ஜெயந்தி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வீடு வீடாகச் சென்று வரி வசூலில் ஈடுபட்டனர்.

கமிஷனர் காஞ்சனா கூறும்போது: நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரிகளை உடனடியாக கட்ட வேண்டும். குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்கள் இணைப்பு துண்டிக்கப்படும், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X