இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோயில்கிருத்திகா மண்டல வேத பாராயணம், அனுஷ வைபவம்: காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மகா பெரியவர் விக்ரஹத்திற்கு அபிேஷகம், மாலை 5:00 மணி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மாலை 6:00 மணி.பிராத்தனை சேவை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், ஏற்பாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், மாலை 5:30 மணி.கிருத்திகா மண்டல வேத பாராயணம்,கோயில்

கிருத்திகா மண்டல வேத பாராயணம், அனுஷ வைபவம்: காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மகா பெரியவர் விக்ரஹத்திற்கு அபிேஷகம், மாலை 5:00 மணி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மாலை 6:00 மணி.

பிராத்தனை சேவை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், ஏற்பாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், மாலை 5:30 மணி.

கிருத்திகா மண்டல வேத பாராயணம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட்ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

ஞானப்பரம்பரை: நிகழ்த்துபவர் - சொ.சொ.மீ.சுந்தரம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: திருப்புகழ் சபை, மாலை 6:30 மணி.

சம்பூர்ண கீதா பாராயணம்: நிகழ்த்துபவர் - விவிதா அருண், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: கீதா, காலை 7:30 மணி முதல்.

பள்ளி, கல்லுாரி

பொன்விழா கொண்டாட்டம்- பள்ளிகளுக்கு இடையிலான கலை நிகழ்ச்சி போட்டி: டி.வி.எஸ்., பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அருண் வல்லப்பன், காலை 9:00 மணி.

கணினி, தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள புதிய தொழில் நுட்பம் குறித்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல் மற்றும் கருத்தரங்கு: வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் அலி, காலை 9:00 மணி முதல்.

ஆளுமை மேம்பாட்டு நிகழ்ச்சி: வைகை பொறியியல் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: நடிகர், ஊக்கமளிப்பு பேச்சாளர் தாமு, மதியம் 2:00 மணி.

மனித உரிமைகள் தினம், மார்ட்டின் மக்வான் வருடாந்திர உதவித்தொகை விரிவுரை: லேடி டோக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: சோகோ அறக்கட்டளை இணை இயக்குநர் செல்வ கோமதி, ஏற்பாடு: மனித உரிமைகள் கல்வி மையம், காலை 11:30 மணி.

சட்ட தினம், வழக்கறிஞர் காந்தி சிறப்புக் கண்காட்சி, காந்தியடிகள் பார்வையில் அரசியல் சாசனம் சொற்பொழிவு: அரசு சட்டக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாலகிருஷ்ணன், பேசுபவர்: வழக்கறிஞர் செந்தில்குமார், வாழ்த்துரை: காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், காலை 11:00 மணி.

குயீன் மீரா இன்டர்நேஷனல் பள்ளி வீரவனம் நிகழ்ச்சி: குயீன் மீரா இன்டர்நேஷனல் பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்: டி.ஐ.ஜி., பொன்னி, மாலை 6:00 மணி.

தமிழக நடுகல் கண்காட்சி: மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, துவக்கி வைப்பவர்: சுற்றுலா அலுவலர் பாலமுருகன், ஏற்பாடு: மதுரை அரசு அருங்காட்சியகம், கல்லுாரி வரலாற்றுத் துறை, காலை 10:00 மணி.

சிறப்பு குழந்தைகளுக்கான போட்டிகள்: சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரி, பசுமலை, மதுரை, காலை 10:00 மணி.

தொழில் முனைவோர் திறன் நிகழ்ச்சி: சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, வரவேற்புரை: ஆங்கில துறைத் தலைவர் சுஜாதா, சிறப்பு விருந்தினர்: இந்திய வளர்ச்சிக்கான மாற்று இயக்குநர் அரசு, காலை 11:15 மணி.

30ம் ஆண்டு விளையாட்டு விழா: எஸ்.இ.வி., மெட்ரிக் பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்: டி.ஐ.ஜி., பொன்னி, காலை 8:00 மணி.

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்: சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பரங்குன்றம், ஏற்பாடு அரசு இசைக்கல்லுாரி மாணவர்கள், மாலை 4:30 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்

வளர் இளம் பருவ பிரச்சனைகளை கையாளுதல்: குமாரம், ஏற்பாடு: மதுரை மீனாட்சி பதின்ம மேல்நிலைப்பள்ளி, காலை 10:00 மணி.

பள்ளி வளாகம், கோயில் வளாகம் கண்மாய் கரையை சுத்தம் செய்தல், இன்றைய சமுதாய மாற்றத்தில் இளைஞர்களின் பங்கு: கோவில்பாப்பாகுடி, ஏற்பாடு: புனித அந்தோணியார் பள்ளி, மதுரை, காலை 10:00 மணி.

பல் பரிசோதனை முகாம், ஆசனப் பயிற்சி, ஏரோபிக்ஸ்: சாமநத்தம், பங்கேற்பு: உடற்கல்வி இயக்குநர் அருள் ஷர்மிளா, ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை, காலை: 9:30 மணி முதல்.

கால்நடை மருத்துவ முகாம்: வெள்ளக்கல், மதுரை, தலைமை: கால்நடை உதவி மருத்துவர் கோபிநாத், ஏற்பாடு: மதுரை நாடார் அருப்புக்கோட்டை உறவின்முறை மகளிர் மேல்நிலைப்பள்ளி, காலை 9:30 முதல்.எய்ட்ஸ் விழிப்புணர்வு, ஜோதிமாணிக்கம், தலைமை: ஆசிரியர் அருள் ஜோசப், ஏற்பாடு: புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளி, கருமாத்துார், காலை 9:30 மணி.

கிராம பொதுக்கோயில் உழவாரப் பணிசெய்தல், மாணவர்களும் ஆன்மிகமும்: உச்சப்பட்டி கிராம பொது சமுதாய மண்டபம், தலைமை: உதவி தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி(ஓய்வு) செல்வராஜ், ஏற்பாடு: தியாகராசர் ஆலை மேல்நிலைப்பள்ளி, கப்பலுார், காலை 11:00 மணி முதல்.

நலமான இளைஞர் வளமான பாரதம்: கைப்பேசி, சமூக ஊடகம் குறித்த விழிப்புணர்வு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: சாத்தங்குடி, தலைமை: கோபிநாத், ஏற்பாடு: பி.கே.என்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம், காலை 9:30 மணி.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, சுய வேலைவாய்ப்பு: உறங்கான்பட்டி, தலைமை: ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி, பயிற்சியாளர்: நடராஜன், ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைப்பள்ளி, மதுரை, காலை 9:30 மணி.

உடற்பயிற்சி, கோயில் உழவாரப்பணி, அறிவியல் கலை, கலந்துரையாடல்: அரசு உயர்நிலைப்பள்ளி, கொடிமங்கலம், தலைமை: பள்ளி செயலாளர் பார்த்தசாரதி, ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, காலை 7:00 மணி.

கோயில் வளாகம் குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு பேரணி: மாத்துார், சிறப்புரை: மதுரை ஆறாவது பட்டாலியன் கமாண்டன்ட் பாஸ்கரன், ஏற்பாடு: மங்கையற்கரசி மேல்நிலைப்பள்ளி, மதுரை, காலை 10:00 மணி.

பொது

தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பங்கேற்கும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா குறித்த செயல்வீரர்கள் கூட்டம்: துவாரகா பேலஸ் மண்டபம், ரிங்ரோடு, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் தளபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், காலை 10:00 மணி.

2023ம் ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா: பழங்காநத்தம் அக்ரஹாரம் ராமர் கோயில் அருகில், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சமாஜம் நிர்வாகிகள், மாலை 6:00 மணி.

செல்வமகள் சேமிப்பு கணக்கு துவக்க விழா: திருப்பரங்குன்றம், ஏற்பாடு: தி.மு.க. தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விமல், காலை 10:00 மணி.

மெஜூரா கோட்ஸ் பாலம் சீரமைக்க கோரி பாலம் நடுவில் ஆர்ப்பாட்டம்: ஞாயிற்றுக்கிழமை சந்தை அருகில், தமிழ்ச்சங்கம் ரோடு, மதுரை, ஏற்பாடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2ம் பகுதிக் குழு, காலை 10:00 மணி.

கண்காட்சி

காந்தி சில்ப் பஜார்: அகில இந்திய கைவினைப்பொருட்களின் விற்பனை, கண்காட்சி, ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: பெட்கிராட் நிறுவனம், காலை 10:00 முதல்.

திருப்பூர் கலெக்சன்ஸ், ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 9:30 மணி முதல்.

வேலைவாய்ப்பு முகாம்: மதுரை காமராஜ் பல்கலை, ஏற்பாடு: பல்கலை கழகம், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், காலை 10:00 மணி முதல்.

மருத்துவம்

ஆண் குடும்பநல கருத்தடை சிறப்பு முகாம்: அரசு ஆரம்ப சுகாதார நிலையம், செக்கானுாரணி, அரசு மருத்துவமனை, மதுரை, ஏற்பாடு: குடும்பநலத்துறை, காலை 9:00 மணி முதல்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X