புகார் பெட்டி

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் அருகே மாநகராட்சி 93வது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி குடியிருப்போர் அவதியுறுகின்றனர்.குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பாண்டியராஜன், சாலை முத்து, மணிகண்டன், மதுரைவீரன், சீனிவாசன், பாக்கியலட்சுமி, மஞ்சுளா, மகமாயி, உதயன், காந்திமதி ஆகியோர் கூறியதாவது:இப்பகுதி 35 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. 1500க்கும்
 புகார் பெட்டி



திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் அருகே மாநகராட்சி 93வது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி குடியிருப்போர் அவதியுறுகின்றனர்.

குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பாண்டியராஜன், சாலை முத்து, மணிகண்டன், மதுரைவீரன், சீனிவாசன், பாக்கியலட்சுமி, மஞ்சுளா, மகமாயி, உதயன், காந்திமதி ஆகியோர் கூறியதாவது:

இப்பகுதி 35 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. 1500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விரிவாக்க பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இப்பகுதியில் ஆரம்ப காலம் முதல் தார் ரோடு அமைக்கவில்லை. மணல் ரோடுகளாகவே உள்ளன.மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. தெருக்குழாய்கள், வீட்டு குழாய் இணைப்புகள் இல்லை.

ஒரு ஆழ்குழாயில் தண்ணீர் இல்லை. மற்றொன்றில் குறைவான தண்ணீர் வருகிறது. எங்களது செலவில் ஒரு தெருவில் இரண்டு தெருக்குழாய்கள் அமைத்துள்ளோம். மற்ற தெருக்களில் குழாய்கள் இல்லை. குடம் ஒன்று ரூ. 13 விலை கொடுத்து குடிநீர் வாங்குகிறோம்.

அனைத்து வாகனங்களும் பிரதான ரோடு வழியாக செல்வதால் ரோடு முழுவதும் சேதம் அடைந்து விட்டது. சொந்த செலவில் அவ்வப்போது மணல் கொட்டி சரி செய்து வருகிறோம். கழிவுநீர் கால்வாய்கள், பாதாள சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் தெருக்களில் செல்கிறது. சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கழிப்பறை வசதி இல்லை. குப்பை தொட்டிகள் இல்லை. எப்போதாவது தான் குப்பை எடுக்க வருகின்றனர்.

ஒரு மின் டிரான்ஸ்பார்மர் மட்டுமே உள்ளது. கூடுதலாக அமைக்க இடம் ஒதுக்கி தந்தும் மின் வாரியம் ஒப்புக்கொள்ளவில்லை. பெரும்பாலான தெருக்களில் விளக்குகள் எரிவதில்லை.

இப்பகுதியினர் சிகிச்சைக்கு 4 கி.மீ., துாரத்தில் உள்ள திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும்.அதற்கு பஸ் வசதி கிடையாது. அங்கு சென்றால் பைகாராவிற்கு செல்லுமாறு கூறுகின்றனர்.

இப்பகுதியில் பகுதி நேர ஆரம்ப சுகாதார நிலையம் தேவை. எங்கள்செலவில் தரைப்பாலம்அமைத்துள்ளோம். அனைத்து வரிகளும் முறையாக செலுத்துகிறோம். ஆனால் எங்கள் குறைகளை கேட்கத்தான் யாரும் இல்லை.

எம்.எல்.ஏ., எம்.பி., கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எங்கள் பகுதி கவனிப்பாரற்று கிடைக்கிறது. ஒரு தனி தீவில் வாழ்வது போல் வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X