ஆச்சரியப்படுத்தும் களிமண் நகைகள் வாங்க துாண்டும் வெளிமாநில பொருட்கள் மதுரை காந்தி சில்ப் பஜார் கண்காட்சியில்...

Added : நவ 25, 2022 | |
Advertisement
மதுரை, -மத்திய ஜவுளித்துறை சார்பில் அகில இந்திய கைவினைப் பொருட்களின் கண்காட்சி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நவ.,28 வரை நடக்கிறது. இதனை 'பெட்கிராட்' நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.இங்கு அனைத்து மாநில கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாழை மர நாரில் பின்னப்பட்ட பழக்கூடை, பூஜை கூடை, தட்டு உட்பட 26 வகையான பொருட்கள் பார்வையாளர்களை நிச்சயம் கவரும்.
 ஆச்சரியப்படுத்தும் களிமண் நகைகள் வாங்க துாண்டும் வெளிமாநில பொருட்கள்  மதுரை காந்தி சில்ப் பஜார் கண்காட்சியில்...



மதுரை, -மத்திய ஜவுளித்துறை சார்பில் அகில இந்திய கைவினைப் பொருட்களின் கண்காட்சி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நவ.,28 வரை நடக்கிறது. இதனை 'பெட்கிராட்' நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இங்கு அனைத்து மாநில கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாழை மர நாரில் பின்னப்பட்ட பழக்கூடை, பூஜை கூடை, தட்டு உட்பட 26 வகையான பொருட்கள் பார்வையாளர்களை நிச்சயம் கவரும். பாரம்பரிய நெசவுக்கு பெயர் பெற்ற மதுரை சுங்குடி சேலைகள் 'சிகப்பு கலர் ஜிங்குச்சா' என விதவிதமான வண்ணங்களில் கிடைக்கின்றன.

ஐம்பொன்னாலான அணிகலன்கள் அழகுற மின்னுகின்றன.

கலாசாரத்தை நினைவுபடுத்தும் கேரளா களி மண்ணில் செய்யப்பட்ட பானை, குவளை போன்ற பாரம்பரிய பொருட்கள் கிடைக்கின்றன. உலக புகழ்பெற்ற ஆயக்குடி பித்தளை விளக்கு, பூஜை பொருட்கள், சாமி உருவங்கள் கவருகின்றன. 'எம்பிராய்டு' செய்யப்பட்ட குஜராத் சுரிதார்கள், கைப்பைகளும் நம்மை வாங்க துாண்டுகின்றன.

ஆண்களையும் வாங்க துாண்டும் வகையில் ரூ.300க்கு காதி சட்டை, ரூ.450க்கு குர்தா என விரும்பிய வண்ணங்களில் கிடைக்கிறது. கொல்கத்தா கருப்பு களிமண்ணில் செய்யப்பட்ட டெரக்கோட்டா' நகைகள், ஜெய்பூர் நகைகள் கண்களை சிமிட்டாமல் காணும் ஆர்வத்தை துாண்டுகிறது.

மத்திய பிரதேசத்தின் மின்னும் குந்தன் கற்கள், வேலைப்பாடு நிறைந்த மேஜை விரிப்பான்களும் கிடைக்கின்றன.

வெட்டிவேர் விசிறியும், மணம் வீசும் மெழுகுவர்த்தியும் நிச்சயம் நம்மை ஈர்க்கும். இதுபோன்று பல மாநில பிரத்யேக பொருட்கள் கண்காட்சி முழுவதும் 100 ஸ்டால்களில் கொட்டிக்கிடக்கின்றன. தினமும் காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X