துணை சேர்மன், கணவரின் அதிகார போக்கு ஊராட்சி ஒன்றிய கட்டடத்திற்கு பூமி பூஜை எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., சேர்மன், கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ. 3.90 கோடியில் புதிய கட்டடம்கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதைசேர்மன் வேட்டையன்உள்ளிட்ட பெரும்பாலான கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.திருப்பரங்குன்றம்ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் 1958ல் கட்டப்பட்ட கட்டடம் பழமையானதால் புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. பழைய கட்டடம் 4 மாதத்திற்கு முன்பு
 துணை சேர்மன், கணவரின் அதிகார போக்கு ஊராட்சி ஒன்றிய கட்டடத்திற்கு பூமி பூஜை  எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., சேர்மன், கவுன்சிலர்கள் புறக்கணிப்பு



திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ. 3.90 கோடியில் புதிய கட்டடம்கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதைசேர்மன் வேட்டையன்உள்ளிட்ட பெரும்பாலான கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

திருப்பரங்குன்றம்ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் 1958ல் கட்டப்பட்ட கட்டடம் பழமையானதால் புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. பழைய கட்டடம் 4 மாதத்திற்கு முன்பு அகற்றப்பட்டது. புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

ஒன்றிய துணை சேர்மன் இந்திரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கீதா, தி.மு.க., கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, உஷாராணி, மாயாண்டி (விடுதலை சிறுத்தைகள்) சாந்தி (அ.தி.மு.க.) மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.


சேர்மன், கவுன்சிலர்கள் புறக்கணிப்பு



திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 22 கவுன்சிலர்களில் 14 தி.மு.க., 6 அ.தி.மு.க., ஒரு சுயே., ஒரு விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க., வசமுள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தில் சேர்மன், துணை சேர்மன் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள்.


மிரட்டுகின்றனர்



சேர்மன் வேட்டையன் கூறியதாவது: துணை சேர்மனும், அவரது கணவரும் ஊராட்சி ஒன்றியத்தில் அதிகார போக்கை கடைபிடிக்கின்றனர். அதிகாரிகளை மிரட்டுகின்றனர். பூமி பூஜை நடப்பது குறித்து காலையில்தான் தகவல் கூறுகின்றனர். இந்த கட்டட டெண்டர் விஷயத்தில் அரசு விதிகள் பின்பற்றப்படவில்லை. அவசர கதியில் பூமி பூஜை நடத்துகின்றனர். எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் எங்களை ஒதுக்க வேண்டும் என்ற நோக்கில்இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்றார்.


இது தேவையா



அ.தி.மு.க., குழு தலைவர் முருகன் கூறியதாவது:

ஏற்கனவே இருந்த கட்டடம் நல்ல ஸ்திரத்தன்மையுடன்தான் இருந்தது. அதை அகற்ற வேண்டிய அவசியமே இல்லை. புதிய கட்டடம் வேண்டும் என்றால் வளாகத்தில் உள்ள வேறு இடத்தில் கட்டலாம். சுயநலத்திற்காகஇந்த பூமி பூஜையை நடத்துகின்றனர். ஊராட்சி ஒன்றிய அனைத்து பகுதிகளிலும் பிரச்னைகள் அதிகமுள்ளன. இந்த புதிய கட்டடத்திற்கான பணத்தை மக்கள் பணிக்கு செலவு செய்திருக்கலாம். நிதி நெருக்கடி உள்ள நிலையில் புதிய கட்டடத்திற்கு இவ்வளவு தொகை செலவிட வேண்டுமா. இந்த பூமி பூஜை குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றார்.


இது கட்சி விழா அல்ல



துணை சேர்மன் இந்திரா: இது அரசு விழா. அதிகாரிகள் எடுத்த முடிவின்படி நடந்தது. அதிகாரிகள்அனைவருக்கும் தகவல் தெரிவித்து விட்டனர். இது கட்சி விழா அல்ல.

சேர்மன் தான் தலைமை தாங்கி நடத்த வேண்டும்.அவர் வராததால் என் தலைமையில் விழா நடத்தப்பட்டது. நாங்கள் எந்த அதிகாரமும் செய்யவில்லை, என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X