கரிசல்குளத்தில் சேறும் சகதியும் நிறைந்த ரோடு

Added : நவ 25, 2022 | |
Advertisement
மதுரை-மதுரை மாநகராட்சி வார்டு 2ல் கரிசல்குளம் பாண்டியன்நகர் விரிவாக்கம் திருமால் நகர் பகுதியில் ரோடு மோசமாக உள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் மழையால் சேறும், சகதியுமாகி பள்ளம், மேடாக ரோடு படுமோசமாக உள்ளது.இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடைக்காக ரோட்டை தோண்டினர். தோண்டிய பள்ளத்தை மூடாமல் விட்டுவிட்டனர். நீண்ட



மதுரை-மதுரை மாநகராட்சி வார்டு 2ல் கரிசல்குளம் பாண்டியன்நகர் விரிவாக்கம் திருமால் நகர் பகுதியில் ரோடு மோசமாக உள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் மழையால் சேறும், சகதியுமாகி பள்ளம், மேடாக ரோடு படுமோசமாக உள்ளது.

இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடைக்காக ரோட்டை தோண்டினர். தோண்டிய பள்ளத்தை மூடாமல் விட்டுவிட்டனர். நீண்ட நாட்களாக சரிசெய்யாததால் மாநகராட்சியில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் குடிநீர் குழாய் அமைக்க நன்றாக இருந்த ரோடு தோண்டி, பணிமுடிந்தும் சீரமைக்கப்படாமல் உள்ளது.

வாகனங்கள் செல்ல இயலாததால் பள்ளி, அலுவலகங்கள் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் நாய்கள் தொல்லை அதிகமுள்ளது. தெருவிளக்குகளும் இல்லாததால் திருட்டு பயத்தில் உள்ளனர். மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X