மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அவகாசம்: இல்லாவிட்டால் கட்டணம் ‛ஷாக்' அடிக்கும்

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
ஆதார் அட்டையை இணைக்காதவர்கள், மின் கட்டணம் செலுத்த முடியாதபடி, சாப்ட்வேர் திடீரென மாற்றப்பட்டதால், கடைசி நாளில் மின் கட்டணம் செலுத்த முடியாமல், பல லட்சம் மின் நுகர்வோர் தவித்தனர்.தமிழகத்தில், மானியம் பெறும் அனைத்து மின் இணைப்புகளுக்கும், அதன் உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென்று மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் மின் கட்டண வசூல் மையங்களில்,
EB, Aadhaar, Electricity Bill, TNEB, தமிழ்நாடு, தமிழகம், மின் கட்டணம், ஆதார், இணைப்பு, அவகாசம்

ஆதார் அட்டையை இணைக்காதவர்கள், மின் கட்டணம் செலுத்த முடியாதபடி, சாப்ட்வேர் திடீரென மாற்றப்பட்டதால், கடைசி நாளில் மின் கட்டணம் செலுத்த முடியாமல், பல லட்சம் மின் நுகர்வோர் தவித்தனர்.

தமிழகத்தில், மானியம் பெறும் அனைத்து மின் இணைப்புகளுக்கும், அதன் உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென்று மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் மின் கட்டண வசூல் மையங்களில், நுகர்வோர்களிடம், நேற்று காலை வரையிலும் வழக்கம்போல மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ஆனால் பிற்பகல் 11:00 மணிக்கு மேல், கட்டணம் செலுத்த வந்த நுகர்வோரிடம் கட்டணம் வாங்க, வசூல் மைய அதிகாரிகள் மறுத்து விட்டனர். மக்கள் கேட்டதற்கு, 'ஆதார் அட்டையை இணைக்காதவர்கள், மின் கட்டணம் செலுத்த முடியாத வகையில், சாப்ட்வேரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என்று விளக்கம் அளித்தனர்.

கம்ப்யூட்டர் மானிட்டரில், 'ஆதார் எண் இணைக்கப்படவில்லை. மின் கட்டணம் செலுத்தும் முன், ஆதார் எண்ணை இணைக்கவும்' என்று ஆங்கிலத்தில் வந்த தகவலையும், நுகர்வோரிடம் காண்பித்தனர். இதனால், கட்டணம் செலுத்த வந்த பல ஆயிரம் பேர், கட்டணம் செலுத்த முடியாமல் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாளில் வந்த பலரிடமும், கட்டணம் பெற மறுக்கப்பட்டதால், மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ என்ற அச்சத்தில் பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news
கால அவகாசம் தேவைதற்போதுள்ள சூழ்நிலையில், ஏழை, எளிய மக்கள்தான், இத்தகைய மின் கட்டண வசூல் மையங்களுக்கு நேரடியாகச் சென்று, ரொக்கப்பணம் கொடுத்து, மின் கட்டணம் செலுத்துகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள். வீடு மற்றும் மின் இணைப்பின் உரிமையாளர்கள் பலர், வெளியூர்களில் வசிக்கின்றனர்; வெளிநாடுகளிலும் சிலர் இருக்கின்றனர். இவர்களை உடனே தொடர்பு கொண்டு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது, எல்லோருக்கும் சாத்தியமில்லை.

இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும்போது, அதை செயல்படுத்துவதற்கு, மக்களுக்கு கால அவகாசம் வழங்குவது வழக்கம். ஆனால் திடீரென அறிவித்து, மின் கட்டணத்தை வாங்க மறுப்பது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென்று அறிவுறுத்திய மத்திய அரசு, அதற்காக ஓராண்டு வரை அவகாசம் அளித்தது. ஆனால் தமிழக அரசு, இப்படி அவசர கதியில் அறிவித்து, அதை உடனே செயல்படுத்த நினைப்பது, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் அளிப்பது அவசியம்.

தற்போது மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் அவகாசத்தை, இரண்டு நாட்கள் நீடித்து மின் வாரியம் அறிவித்துள்ளது. இதை மேலும் பல நாட்களுக்கு நீடித்துத் தருவதோடு, அதுவரை மின் கட்டணம் செலுத்தும் வகையில், சாப்ட்வேரில் மாற்றம் செய்யவும் மின் வாரியத்துக்கு உத்தரவிட வேண்டுமென்று, மின் வாரிய ஒழுங்கு முறை ஆணையத்துக்குப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நமது சிறப்பு நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramakrishnan - Chennai,இந்தியா
27-நவ-202207:23:47 IST Report Abuse
Ramakrishnan ஆதார் அரசு மானியதிற்கு தவிர வேறு எதற்காகவும் கட்டாயப்படுத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆகையால் 100 யூனிட் இலவசம் வேண்டாம் என்பவர்களை விட்டு விட வேண்டியது தானே. முதலில் அங்கு உள்ள ஊழலை ஒழிக்கட்டும். லஞ்சம் கொடுக்காமல் ஒரு புதிய இணைப்பு பெறமுடியுமா, இல்லை லைன் மேனக்கு பணம் கொடுக்காமல் வயரை மாற்ற/சரி செய்ய முடியுமா. மீட்டர் மாட்டுவது அவர்களின் வேலை என்றாலும் அதற்கும் நாம் தான் பணம் தர வேண்டும். பெயர் மாற்றம் லஞ்சம் கொடுக்காமல் செய்ய முடியுமா. ஆதாருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? யாராவது அவர்களாகவே கம்பத்தில் ஏறி கனெக்ஷன் கொடுத்துக் கொண்டார்களா. உபயோகிப்பவர் யாராவது வெளிநாட்டுக்கு மின்சாரம் விற்கிறார்களா? கொக்கி போட்டு திருடும் அரசியல்/மத நிகழ்ச்சிகளை ஏன் என்று கேட்க வக்கில்லை. இந்த 100 யூனிட் இலவசத்தை நிறுத்த இது ஒரு வழி. இப்படி தான் கேஸ் மானியம் வழங்க ஆதார் இணைக்க சொன்னார்கள். ஆரம்பத்தில் 275ரூ கொடுத்தவர்கள் இப்போது 25 ரூ ஆக்கி விட்டார்கள். இதெல்லாம் மக்களை ஏமாற்றும் அரசியல் அயோக்கியத்தனம்.
Rate this:
Cancel
Durai -  ( Posted via: Dinamalar Android App )
26-நவ-202200:14:00 IST Report Abuse
Durai How to Link Aadhar Card with TNEB Online?The consumer will have to visit the official website of TNEB at https://nsc.tnebltd.gov.in/adharupload/There will be a form for Aadhar linking where in you will have to enter your TANGEDCO Service Connection Number.you will have to confirm your mobile number by generating OTP.Enter OTP and verify your TANGEDCO account.Enter the Occupants details.Enter your Aadhar card number that is to be linked with the TANGEDCO Account.Enter your name as it is on the Aadhar.Upload your Aadhar ID.Submit the form and download the acknowledgement receipt
Rate this:
Cancel
GUNASEKARAN C - CHENGALPATTU,இந்தியா
25-நவ-202222:30:04 IST Report Abuse
GUNASEKARAN C இதற்கான பதிலை மக்கள் எதிர்வரும் தேர்தல் நேரத்தில் கண்டிப்பாக அளிப்பார்கள் ஏன்னெனில் ஆட்சியாளர்களை பொருத்தவரை மக்களை அடிமை என்றே நினத்து சட்டம் இயற்றுகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X