ஜாகிர் நாயக் ஆதரவு பேச்சு: விஜயதரணிக்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | கருத்துகள் (41) | |
Advertisement
பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜாகிர் நாயக்குக்கு ஆதரவாகப் பேசியுள்ள காங்., விஜயதாரணிக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த ஜாகிர் நாயக், அடிப்படையில் மருத்துவர். முஸ்லிம் மார்க்க அறிஞராக தன்னை காட்டி கொள்ள முயற்சித்து, அடிப்படைவாதம் குறித்து பேச துவங்கினார். அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகளின் பின்னணியில் பயங்கரவாத நடவடிக்கை
Vijayadharani,Vellore Ibrahim,Zakir Naik,BJP, Congress,ஜாகிர் நாயக், விஜயதரணி,வேலுார் இப்ராஹிம்

பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜாகிர் நாயக்குக்கு ஆதரவாகப் பேசியுள்ள காங்., விஜயதாரணிக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த ஜாகிர் நாயக், அடிப்படையில் மருத்துவர். முஸ்லிம் மார்க்க அறிஞராக தன்னை காட்டி கொள்ள முயற்சித்து, அடிப்படைவாதம் குறித்து பேச துவங்கினார். அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகளின் பின்னணியில் பயங்கரவாத நடவடிக்கை உள்ளது என்பதை, மத்திய அரசு கண்டறிந்தது.


அவரை கைது செய்ய முயற்சி நடக்க, அதை அறிந்த ஜாகிர் நாயக், மலேஷியாவுக்கு தப்பி சென்று, அங்கே தஞ்சமடைந்தார். சில ஆண்டுகளாக அங்கே தங்கி வருகிறார்.


கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள், ஜாகிர் நாயக் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளன. அவரை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வர, சர்வதேச போலீஸ் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.பிளவுபடுத்தும் கருத்துக்கள்


இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி காங்., - - எம்.எல்.ஏ.,விஜயதாரணி, 'ஜாகிர் நாயக் ஒரு ஞானி. அவர் மீது மத்திய அரசு தவறாக நடவடிக்கை எடுக்க முயல்கிறது. அப்படிப்பட்ட அரசு நமக்கு தேவையில்லை' என, பேசியுள்ளார்.


latest tamil news


இது குறித்து, பா.ஜ.,வின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கூறியதாவது: முஸ்லிம் மக்களை திசை திருப்பக் கூடிய அபத்தான கருத்தை விஜயதாரணி கூறியுள்ளார். முதலில், ஜாகிர் நாயக் என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


இஸ்லாமிய கல்வியை கற்றதாக கூறும் ஜாகிர் நாயக், முஸ்லிம் மக்களிடம் மத பிரசாரம் மேற்கொண்டார். அவரது பேச்சில் முழுக்க முழுக்க இனவாதமும், மத நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் கருத்துக்களும் தான் வெளிப்பட்டன.


அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதற்கு காரணம், பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் என்பது உலகம் அறிந்த உண்மை.மலேசியாவில் தஞ்சம்


ஆனால், 'ஒசாமாவும், அவருக்கு பின்புலமாக இயங்கிய ஆதரவாளர்களும், இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமானவர்கள் அல்ல' என்று கூறியவர் ஜாகிர் நாயக். இதில் இருந்தே, அவர் எத்தகைய ஆபத்தானவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.


தேசப் பற்றும், தேச ஒற்றுமையும் ஒவ்வொரு இஸ்லாமியனின் நெஞ்சிலும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், தேசத்துக்கு எதிராக, அவர்களை திசை திருப்ப கூடிய வேலையை தான் ஜாகிர் நாயக் செய்தார்.


அதுமட்டுமல்ல, சட்டவிரோத பண பரிமாற்றம் செய்தவர். வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து தவறான வழியில் பணம் பெற்று, அதை வைத்து பல்வேறு மத மக்களுக்கு இடையே மோதலை உண்டாக்கும் அளவில், துவேஷ பிரசாரத்தை துணிந்து செய்தவர்.


இந்த நடவடிக்கையை அறிந்த மத்திய அரசு, தன் புலனாய்வு அமைப்புகள் வாயிலாக, அவர் மீது நடவடிக்கை எடுத்து, கைது செய்ய முயற்சித்தது. அந்த சமயத்தில் தான், அவர் மலேஷியாவில் தஞ்சமடைந்தார். தவறு செய்யாதவராக இருந்திருந்தால், இந்த மண்ணிலேயே இருந்து, தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து, நீதிமன்றம் வாயிலாக குற்றமற்றவர் என நிரூபித்திருக்க வேண்டும். கோழையாக தப்பித்து ஓடியவர் ஜாகிர் நாயக்.தண்டிக்க வேண்டும்


இப்படிப்பட்ட மோசமான பின்புலம் கொண்ட ஜாகிர் நாயக்கை, ஞானி என்று புகழ்வதும், மத்திய அரசு அவரை விரட்டி அடித்ததுபோல மேடையில் ஏறி நின்று பேசுவதும், ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு அழகல்ல. அவரது பேச்சு முழுக்க முழுக்க ஓட்டு அரசியலை பின்புலமாக கொண்டது.


அமைதியாக தேச பற்றுடன், தேச வளர்ச்சியை முன்னெடுக்க கூடிய இஸ்லாமியர்களை திசை திருப்பி, அவர்களை தவறான பாதைக்கு இட்டு செல்லும் அளவில், ஜாகிர் நாயக் பேச்சு இருக்கும் என்றால், அதே வேலையை தான் ஒரு எம்.எல்.ஏ.,வாக விஜயதாரணியும் செய்கிறார்.


தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஏன் முஸ்லிம்களாக இருந்தாலும், இந்த சமூகம் அவர்களை புறக்கணிக்க வேண்டும். அந்த வகையில், பயங்கரவாதியாக பார்க்கப்படும் ஜாகிர் நாயக்கை ஆதரித்து பேசும் விஜயதாரணியையும் இந்த சமூகம் புறக்கணிக்க வேண்டும்.


சமூக நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பேசும் விஜயதாரணி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, அவரை தண்டிக்க வேண்டும். இவர்களிடம் இஸ்லாமியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-நவ-202221:40:33 IST Report Abuse
பேசும் தமிழன் தலைவன் பப்பு எவ்வழியோ... தொண்டர்களும் அவ்வழியே.... அவரை போன்றே... இவரும் தீவிரவாத ஆதரவு பேச்சு பேசுகிறார்
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
25-நவ-202220:01:13 IST Report Abuse
venugopal s இப்போது வரிந்து கட்டிக் கொண்டு வரும் பாஜகவினருக்கு பாஜக ஆட்சியில் தான் ஜாகிர் நாயக் இந்தியாவில் இருந்து மலேஷியாவுக்கு தப்பிச் சென்றார் என்று தெரியாதோ? அப்போது மத்திய பாஜக அரசு என்ன விரல் சப்பிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததா?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
25-நவ-202214:35:33 IST Report Abuse
Bhaskaran இந்த அம்மாவின் வாங்கிக்கணக்குகளை ஆராயனும் தீவிரவாதிகளிடம் இருந்து நிதி வருகிறதோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X