'ஆன்லைன்' சூதாட்ட தடை மசோதா; விளக்கம் கேட்கும் கவர்னர்: அமைச்சர் பதில்

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை: 'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கடிதம் எழுதி உள்ளார்.இணையதள சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஜூன் 27ல் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை அதே நாளில்
Online Gambling, Governor, RN Ravi, Online Rummy, கவர்னர், ரவி, ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் சூதாட்டம்

சென்னை: 'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கடிதம் எழுதி உள்ளார்.

இணையதள சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஜூன் 27ல் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவை பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன்பின் பள்ளி மாணவர்கள் மீது ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தி உள்ள தாக்கம் குறித்து பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு; பொது மக்களிடம் இ - மெயில் வழியாக பெறப்பட்ட கருத்துகள் பெறப்பட்டன. அவற்றின் அடிப்படையில் சட்டத் துறை ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது. இது ஆக. 29ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.



latest tamil news


அதை மேலும் செம்மைப்படுத்த முடிவு செய்து அதன்படி அவசர சட்டம் தயார் செய்யப்பட்டது. கடந்த செப். 26ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தறடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் அவசர சட்டத்துக்கு அக். 1ல் கவர்னர் ஒப்புதல் அளித்தார். அதையடுத்து அவசர சட்டத்திற்கு மாற்றாக கடந்த 19ம் தேதி சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. கவர்னர் ஒப்புதலுக்காக அக். 28ல் அனுப்பப்பட்டது. ஆனால் கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை. இது தொடர்பாக கவர்னரை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.



இந்நிலையில் அந்த சட்ட மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கடிதம் எழுதி உள்ளார். அதன் அடிப்படையில் சந்தேகங்களுக்கு விளக்கம் தயார் செய்யும் பணியை சட்டத் துறை மேற்கொண்டுள்ளது.



அமைச்சர் பதில்

ஆன்லைன் சூதாட்டத்தைதடை செய்வது தொடர்பான சட்ட மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழக அரசு பதில் கடிதம் அனுப்பி உள்ளது. உரிய விவரங்களை சேகரித்து முறையாக ஆய்வு செய்து வல்லுநர் அறிக்கைக்கு பிறதே சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே கொண்டு வரப்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை பரிசீலிப்பதாக கவர்னர் கூறியுள்ளார். இருப்பினும் தடை மசோதாவிற்கு கவர்னர் தாமதமின்றி ஒப்புதல் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
25-நவ-202219:00:33 IST Report Abuse
Narayanan ஆளுநர் கேள்வி கேட்கிறார் என்றால் ஏதோ விபரீதம் இருக்கிறது
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
25-நவ-202217:59:39 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் ///ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை பரிசீலிப்பதாக....//// ஏங்க... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட தமிழ்நாடு சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து... அதை மாமன்றமே ஏற்றுக் கொண்டு... “ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா” நிறைவேற்றப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை.... “நியமனம்” செய்யப்பட்ட ஆளுநர் தாமப்படுத்துவதும், அதில் கேள்வி கேட்பதும்..... இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதா.... என்பது தெரியவில்லை, புரியவில்லை.
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
25-நவ-202214:18:54 IST Report Abuse
Dharmavaan விளக்கம் என்ன கேட்டிருக்கிறார் என்று சொல்லவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X