அமைச்சர் தியாகராஜன் ஆதரவு கவுன்சிலர்களுக்கு 'நோட்டீஸ்' : மதுரையில் 'மாஸ்' காட்டும் மா.செ.,க்கள்

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
மதுரை: மதுரையில், தி.மு.க., கவுன்சிலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர்களான மேயர் இந்திராணி உட்பட, ஒன்பது தி.மு.க., கவுன்சிலர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் கேட்டு, அமைச்சருக்கு எதிராக மாவட்ட செயலர்கள் 'கெத்து' காட்டியுள்ளது, கட்சியில் வரவேற்பை பெற்றுள்ளது.மதுரையில் அமைச்சர் தியாகராஜன், தன் ஆதரவாளரான இந்திராணிக்கு
DMK, PTR, Madurai, தியாகராஜன், மதுரை, பிடிஆர், திமுக, மாவட்ட செயலாளர்கள்

மதுரை: மதுரையில், தி.மு.க., கவுன்சிலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர்களான மேயர் இந்திராணி உட்பட, ஒன்பது தி.மு.க., கவுன்சிலர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் கேட்டு, அமைச்சருக்கு எதிராக மாவட்ட செயலர்கள் 'கெத்து' காட்டியுள்ளது, கட்சியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரையில் அமைச்சர் தியாகராஜன், தன் ஆதரவாளரான இந்திராணிக்கு தன்னிச்சையாக மேயர் பதவி பெற்றுத்தந்தது முதல், தற்போது வரை கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறார். ஆனால், நகர செயலர் தளபதி, மதுரை வடக்கு மாவட்ட செயலரான அமைச்சர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலர் மணிமாறன் ஆகியோர் ஓரணியில் திரண்டு, அமைச்சர் தியாகராஜனின் ஆதிக்க ஆசைக்கு, 'செக்' வைத்தனர். இந்நிலையில், 'கட்சியே குப்பையாக கிடக்கிறது' என்ற அமைச்சர் தியாகராஜனின் விமர்சனத்திற்கு பின், மதுரையில் தி.மு.க., நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர். அமைச்சர் ஆதரவாளர்கள் பலர், எம்.எல்.ஏ., தளபதி பக்கம் சாயத் துவங்கியுள்ளனர்.இந்நிலையில், மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என, ஆலோசனை வழங்குவதற்கான கூட்டத்தை, மதுரையில் மூன்று மாவட்ட செயலர்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தனர். இதில், மூர்த்தி, தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி பங்கேற்றனர். சொந்த பணி காரணமாக தெற்கு மாவட்ட செயலர் மணிமாறன் பங்கேற்கவில்லை; அது குறித்து அவர், கடிதம் அளித்துள்ளார். இதில், மொத்தமுள்ள, மாநகராட்சி 69 கவுன்சிலர்களில், அமைச்சர் தியாகராஜன் ஆதரவாளரான மேயர் இந்திராணி, மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, பகுதி செயலரான போஸ் முத்தையா உட்பட ஒன்பது கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.latest tamil news


இவர்களுக்கு நகர தி.மு.க., சார்பில் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அமைச்சர் என்றாலும், கட்சி சார்பில் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடத்தினால், அதில் பங்கேற்க வேண்டும் என்பது நடைமுறை. இதில், மேயரே பங்கேற்கவில்லை. அதனால் தான் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அனைவரும் பதில் அளித்துள்ளனர். இதுகுறித்து கட்சி தலைமைக்கு முறைப்படி தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட செயலர்களின் இந்த, 'மாஸ்' நடவடிக்கையால், மதுரை தி.மு.க.,வில் இதுவரை கோலோச்சிய அமைச்சர் தியாகராஜனின் ஆதரவு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கடும் கலக்கத்தில் உள்ளனர்.இன்று போட்டி பிரியாணி விருந்து?

மதுரையில் மூன்று தி.மு.க., மாவட்ட செயலர்களும் ஒன்றிணைந்து, கட்சியினருக்கு மதுரை பாண்டிகோவில், ரிங்ரோடு அருகே இன்று பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நவ., 29ல் தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி நலத்திட்டம் வழங்கும் விழா நடப்பதை முன்னிட்டு, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்காக ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால், முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., தலைவராக மீண்டும் தேர்வானதற்காக அமைச்சர் தியாகராஜன் மதுரையில் பிரமாண்ட பிரியாணி விருந்து வைத்தார். இதை, அமைச்சர் மூர்த்தி, தளபதி உள்ளிட்ட மா.செ.,க்கள், நிர்வாகிகள் புறக்கணித்தனர். இந்நிலையில், அதற்கு போட்டியாக தங்கள் ஆதரவாளர்களுக்காக, இந்த விருந்தை மா.செ.,க்கள் ஏற்பாடு செய்துள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
25-நவ-202214:16:28 IST Report Abuse
vpurushothaman இவர்களுக்கு கொண்டாட்டம். ஆடுகளுக்குத் திண்டாட்டம். கறி விருந்து பழனியாரின் சுவைக்கு உதவுமா ? எதிர் தரப்புக்கு விருந்தாகுமா ? கட்சிக்கு " அரோகரா " கொடுக்கப் பழனியார் திட்டமிட்டு விட்டார். தாமரைக்கு உற்சாகம் பொங்க வைத்து விட்டனர் இவர்களிருவரும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-நவ-202213:45:49 IST Report Abuse
duruvasar இதில் எந்தெந்த ஆணிகள் தேவையானது என்று எப்படி முடிவு செய்வது என்ற கடின சோதனை தலைமைக்கு
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-நவ-202213:43:08 IST Report Abuse
duruvasar இவர்களே தேவையில்லாத ஆணிகள் தான்
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
25-நவ-202221:25:45 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஅப்படித்தான் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X