போணியாகாத குறும்படம் பார்க்க ரூ.5.5 கோடி வசூலா?: ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
மதுரை: மதுரையில் போணி ஆகாத குறும்படத்தை பள்ளிகளில் திரையிட மாணவர்களிடம் தலா ரூ.10 வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.மதுரையின் அனைத்துப் பள்ளிகளிலும் 'குழந்தைகளின் ஓட்டப்பந்தய வீராங்கனை' என்ற குறும்படத்தை நவம்பர் முதல் மார்ச் வரை திரையிடவும், இதற்காக மாணவர்களிடம் தலா ரூ.10
ShortFilm, School Students, Madurai, மதுரை, குறும்படம், வசூல்

மதுரை: மதுரையில் போணி ஆகாத குறும்படத்தை பள்ளிகளில் திரையிட மாணவர்களிடம் தலா ரூ.10 வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மதுரையின் அனைத்துப் பள்ளிகளிலும் 'குழந்தைகளின் ஓட்டப்பந்தய வீராங்கனை' என்ற குறும்படத்தை நவம்பர் முதல் மார்ச் வரை திரையிடவும், இதற்காக மாணவர்களிடம் தலா ரூ.10 கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் 'குறும்படம் திரையிட அனுமதி பெற்றவர்கள் புரொஜெக்டருடன் பள்ளிக்கு வருவர். அனைத்து மாணவர்களையும் ஒரே இடத்தில் அமர வைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.latest tamil newsஅம்மாடியோவ்... ரூ. ஐந்தரை கோடி


ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

படத்தின் பெயரை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. அரசு பள்ளிகளில் 1.60 லட்சம், உதவி பெறும் பள்ளிகளில் 1.40 லட்சம், மெட்ரிக், சி.பி.எஸ்.இ.,யில் 2.40 லட்சம் என ஐந்தரை லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் உள்ளனர். அவர்களிடம் தலா ரூ.10 கட்டணமாக வசூலித்தால் ரூ.ஐந்தரை கோடியை தாண்டிவிடும். 'பெயர் தெரியாத' படத்திற்கு இவ்வளவு பெருந்தொகையை ஏன் வசூலிக்க வேண்டும்.


எமிஸில் ஆன்லைன் வருகை பதிவு, ஹைடெக் ஆய்வகம், ஆன்லைனின் வகுப்புகள் என தொழில்நுட்பத்தை புகுத்தும் கல்வித்துறை, இப்படத்தை சாதாரண 'பென் டிரைவரிலோ' அல்லது பள்ளியின் 'இ மெயிலுக்கோ' அனுப்பி இலவசமாகவே திரையிட நடவடிக்கை எடுத்தால் ரூ. சில நுாறுகளில் செலவு முடிந்துவிடும். மாணவரிடம் வசூலிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலான விஷயம். அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும், என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
25-நவ-202218:07:47 IST Report Abuse
sankaranarayanan இந்தப்படமும் ரெட் ஜெயன்ட்தான் வெளியிடுகிறதா அதனால்தான் வசூல் ராஜாவாக நிகழுகிறது
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-நவ-202216:34:18 IST Report Abuse
Natarajan Ramanathan ஐந்தரை லட்சம் மாணவர்கள் தலா பத்து ரூபாய் கொடுத்தால் ஐம்பத்து ஐந்து லட்சம்தான் வரும். இப்போது தெரிகிறதா ஏன் அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் கணக்கில் பெயில் ஆகிறார்கள் என்று? இவர்களுக்கு பாதி சம்பளம் கொடுத்தாலே அதுகூட அதிகம்தான்.
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
25-நவ-202216:00:42 IST Report Abuse
V GOPALAN All are worried whether Udayanidhi has acted as Sportsman No one cis ready to see his face
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X