'ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி என்பது எல்.கே.ஜி., படிப்பை போன்றது'

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
தமிழக கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிய ஓராண்டு பயிற்சி போதும் என்ற அறநிலையத்துறை அறிவிப்புக்கு, ஆன்மிகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும், தி.மு.க., அரசின் கொள்கை முடிவால், அதன் ஒரு பகுதியாக, 5 ஆண்டு அர்ச்சகர் பயிற்சியை,
ஓராண்டு பயிற்சி, அர்ச்சகர், ஆன்மிகவாதிகள், எதிர்ப்பு

தமிழக கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிய ஓராண்டு பயிற்சி போதும் என்ற அறநிலையத்துறை அறிவிப்புக்கு, ஆன்மிகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும், தி.மு.க., அரசின் கொள்கை முடிவால், அதன் ஒரு பகுதியாக, 5 ஆண்டு அர்ச்சகர் பயிற்சியை, ஓராண்டு நடத்தினால் போதும் என விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது, அர்ச்சகர் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு பிராமணர் சங்க, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகா கிளை தலைவர் சிவஸ்ரீ செல்லப்பா சிவராச்சியர்:

ஒரே ஆண்டில், அர்ச்சகராக படித்து பூஜை செய்யலாம் என்பது, சாத்தியமே கிடையாது. இதற்கு, நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். வேதம் என்பது கடல். ஓராண்டில் கற்று அர்ச்சகர் ஆவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் பழைய விதிமுறைப்படி, அர்ச்சகருக்கான பயிற்சி, 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும்.


latest tamil newsநாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஸ்ரீ நாகமகா தீர்த்தர் சுவாமி அர்ச்சகர் பிரேமசந்திரன்:

ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி என்பது, எல்.கே.ஜி., படிப்பை போன்றது. வேதபாட சாலை முறையில், 5, 7, 9 ஆண்டு அர்ச்சகர் படிப்பு உள்ளது. இந்த ஆண்டுகளில் படித்தால் மட்டுமே ஒருவர் அர்ச்சகர் ஆக முடியும். முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.தர்மபுரி பரமேஸ்வரன் கோவில் அர்ச்சகர் குருசந்த்சாஸ்திரி:

ஹிந்து மதத்தில் கோவில் கும்பாபிஷேகம் தான் உயர்ந்தது. இதில், நான்கு வேதங்கள், 28 ஆகமங்கள், 64 வகை முத்திரைகள் மற்றும் தமிழில் தேவாரம், திருபுகழ் பாடப்பெற்று, கும்பாபிஷேகம் மிகப்பெரிய வைபோகமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும். அர்ச்சகர் பயிற்சியை, ஐந்தாண்டில் இருந்து, ஓராண்டாக குறைக்க, விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேத மந்திரகள் மட்டுமல்ல, கோவில்களில் தமிழில் பிரதானமாக உள்ள தேவாரம், திருப்புகழை முழுமையாக கற்கவே, ஓராண்டு போதாது என்பது, அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும், அரசுக்கு தெரியும். தமிழக அரசு முடிவை திரும்ப பெற வேண்டும்.தர்மபுரி, ஆதி லிங்கேஸ்வரர் கோவில் அர்ச்சகர் ஸ்ரீதரன் சாஸ்திரி:

தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சியை, ஐந்தாண்டுகளில் இருந்து, ஓராண்டாக மாற்றம் கொண்டு வந்துள்ளதால், கோவில் மரபுகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு ஆழ்வார்கள், நாயன்மார்களையும், தமிழ் மன்னர்களையும் பின்பற்றி, அறநிலையத்துறை விதிகளில் கொண்டு வந்துள்ள மாற்றத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும்.


-நமது நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
qwqewq - Chennai,இந்தியா
25-நவ-202221:34:43 IST Report Abuse
qwqewq 20 ஆண்டு கள்ளநோட்டுஅடிப்பது Doctorate ஆ?.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
25-நவ-202218:59:17 IST Report Abuse
vbs manian நிர்வாகம் செய்வதற்கு கழகம் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை காழ்புணர்ச்சியோடு பழி வாங்க அல்ல. கருணாநிதி கூட இந்தளவுக்கு போகவில்லை. தனி மனித விஷயங்களான பக்தி பூஜை சடங்குகள் இவற்றில் தலையிட யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது. மதசார்பற்ற அரசு ஏன் ஹிந்துக்களை மட்டும் குறி வைக்கிறது. நடுநிலை சிந்தனையாளர்கள் சிந்திக்க வேண்டும். ஏன் கூட்டணி கதியில் உள்ள முஸ்லீம் லீக் வாய் திறக்கவில்லை. கடவுள் மறுப்பு அவர்களுக்கு ஏற்புடையதா. அவர்கள் மசூதி விவகாரங்களில் ஏன் தலையீடு இல்லை. அவர்களுக்கு உள்ள சுதந்திரம் ஹிந்துக்களுக்கு இல்லையா. இந்த கொடுமை காழ்ப்புணர்ச்சி அரசியல் கழகத்தை எரித்து விடும்.
Rate this:
Cancel
karuppasamy - chennai,இந்தியா
25-நவ-202217:11:58 IST Report Abuse
karuppasamy தாயில் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள் மூடர்களே ஏமாற்றி பிழைப்பும் ஒரு பிழைப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X