12 ராசிகளுக்கான வாரபலனும் பரிகாரமும்

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | |
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (25.11.2022 - 1.12.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்:சுக்கிரன், புதன் நன்மையை வழங்குவார்கள். துர்க்கையை வழிபட துன்பம் தீரும்.அசுவினி: வெள்ளிக்கிழமை உங்கள் செயல்கள் தாமதமாகும். அதன்பின் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். அந்நியர் வழியே ஆதாயம் அதிகரிக்கும். நீண்ட
வாரராசி, ராசிபலன், வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், கன்னி, விருச்சிகம்,  தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (25.11.2022 - 1.12.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்:


சுக்கிரன், புதன் நன்மையை வழங்குவார்கள். துர்க்கையை வழிபட துன்பம் தீரும்.


அசுவினி: வெள்ளிக்கிழமை உங்கள் செயல்கள் தாமதமாகும். அதன்பின் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். அந்நியர் வழியே ஆதாயம் அதிகரிக்கும். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.


பரணி: வாரத்தின் முதல் நாளில் சில சங்கடங்கள் தோன்றினாலும் அதன்பின் உங்கள் முயற்சிகளில் லாபம் காண்பீர்கள். விரய குருவால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். இக்காலத்தில் அடுத்தவரை நம்பி உங்கள் பணிகளை ஒப்படைக்காதீர்கள்.


கார்த்திகை 1ம் பாதம்: சந்தோஷமும் சங்கடமும் கலந்த வாரமாக இந்த வாரம் இருக்கும். அரசு வேலைகளில் இழுபறி ஏற்பட்டாலும் அதில் போராடி வெல்வீர்கள். சனிக்கிழமை முதல் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள்.


சந்திராஷ்டமம்:

23.11.2022 மாலை 4:40 மணி - 25.11.2022 இரவு 8:07 மணி
ரிஷபம்:


latest tamil news


கேது, குரு நன்மையை வழங்குவார்கள் குரு பகவானை மனதில் எண்ணி வழிபட குறைகள் தீரும்.


கார்த்திகை 2, 3, 4: வாரத்தின் முதல் நாள் யோகமான நாளாகும். வீட்டில் விசேஷங்களுக்கு திட்டமிடுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சனி ஞாயிறில் கவனமுடன் செயல்படுங்கள். திங்கள் முதல் முயற்சி வெற்றியாகும்.


ரோகிணி: வேகமுடன் செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அரசு வகையில் நன்மைகளை அடைவீர்கள். சனி ஞாயிறில் சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் நிதானம் தேவை. அதன்பின் உங்கள் வழக்கமான வேலைகளில் ஆதாயம் அதிகரிக்கும்.


மிருகசீரிடம் 1, 2: லாப குருவால் உங்கள் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் நிலையில் உயர்வு ஏற்படும். சனி ஞாயிறில் வழக்கமான வேலைகளிலும் சங்கடங்கள் தோன்றும். திங்கள் முதல் நினைத்தது நிறைவேறும்.


சந்திராஷ்டமம்:

25.11.2022 இரவு 8:08 மணி - 27.11.2022 இரவு 10:36 மணி
மிதுனம்:


சூரியன்,புதன், ராகு, நன்மைகளை வழங்குவார்கள். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.


மிருகசீரிடம் 3, 4: வெள்ளி முதல் ஞாயிறு வரை உங்கள் முயற்சிகள் எளிதாக வெற்றியாகும். செயல்களில் லாபகரமான நிலையைக் காண்பீர்கள். திங்கள் செவ்வாயில் சந்திராஷ்டமம் என்பதால் முயற்சி இழுபறியாகும். அதன்பின் நிலைமை சீராகும்.


திருவாதிரை: பிள்ளைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பண வரவு உண்டாகும். திங்கள் செவ்வாயில் எதிர்பாராத நெருக்கடிகளும் சங்கடமும் ஏற்படும்.


புனர்பூசம் 1, 2, 3: அந்நியர்கள் வழியே உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிநாட்டுத் தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திங்கள் செவ்வாயில் செயல்களில் கவனம் தேவை.


சந்திராஷ்டமம்:

27.11.2022 இரவு 10:37 மணி - 30.11.2022 நள்ளிரவு 1:00 மணிகடகம்:


குரு, சுக்கிரன், நன்மைகளை வழங்குவார்கள். திங்களூர் சந்திர பகவானை மனதில் எண்ணி வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.


புனர்பூசம் 4: வெள்ளி முதல் செவ்வாய் வரை உங்கள் செயல்களில் உடனே முடிவைக் காண்பீர்கள். வரவு அதிகரிக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.


பூசம்: செவ்வாய்க்கிழமை வரை உங்கள் எண்ணம் ஈடேறும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். புதன் வியாழனில் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.


ஆயில்யம்: நண்பர்களின் உதவியால் அரசு வழியிலான எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும். உங்கள் ஆரோக்கியம் சீராகும். பகைவர்களின் தொல்லை விலகும். புதன், வியாழனில் எச்சரிக்கை அவசியம்.


சந்திராஷ்டமம்:

30.11.2022 நள்ளிரவு 1:01 மணி - 2.12.2022 அதிகாலை 4:15 மணி
சிம்மம்:


latest tamil news


கேது, சனி நன்மையை வழங்குவார்கள். நவகிரக வழிபாடு நன்மையை அளிக்கும்.


மகம்: வெள்ளிக்கிழமை உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். சனி ஞாயிறில் தொழில் முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். திங்கள் முதல் வருவாய் கூடும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் விலகும்.


பூரம்: உங்கள் முயற்சிக்கேற்ப நன்மைகள் உண்டாகும் வாரம் இது. உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.


உத்திரம் 1: அரசு வழியிலான முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். உங்கள் செயலில் ஆதாயம் உண்டாகும். கவனமுடன் செயல்படுவதால் நன்மைகள் அதிகரிக்கும்.


சந்திராஷ்டமம்:

2.12.2022 அதிகாலை 4:16 மணி - 4.12.2022 காலை 9:12 மணி
கன்னி:


குரு, சூரியன், சுக்கிரன், சந்திரன் நன்மையை வழங்குவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட சுபிட்சம் உண்டாகும்.


உத்திரம் 2, 3, 4: உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளைக் காணும் வாரம் இது. உங்கள் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒரு சிலர் புதிய வீட்டிற்கு குடியேறுவீர்கள்.


அஸ்தம்: வீட்டில் திருமணப் பேச்சு எழும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.


சித்திரை 1, 2: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம் இது. தேவைக்கேற்ற அளவிற்கு வருமானம் வந்து சேரும். நண்பர்கள் உதவியுடன் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள்.
துலாம்:


சுக்கிரன், புதன் நன்மைகளை வழங்குவார்கள். விநாயகரை வழிபட வெற்றி உண்டாகும்.


சித்திரை 3, 4: முயற்சிகளால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். ஜென்ம கேதுவால் எதிர்பார்ப்புகளில் பின்னடைவுகளை சந்திப்பீர்கள் என்றாலும் சிந்தித்து செயல்படுவதால் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள்.


சுவாதி: தன ஸ்தான சுக்கிரன் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். ஒரு சிலருக்கு வேலை வாய்ப்பிற்குரிய தகவல் வரும். நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம்.


விசாகம் 1, 2, 3: சுக ஸ்தான சனியால் உங்கள் எதிர்பார்பிற்கு எதிர்மறையான விஷயங்கள் நடந்தேறலாம். உங்களை சோதிக்கும் அளவில் சில சம்பவங்கள் நடக்கும். நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.
விருச்சிகம்:


சனி, குரு, ராகு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவார்கள். திருச்செந்தூர் முருகனை மனதின் எண்ணி செயல்படுங்கள்.


விசாகம் 4: வெள்ளிக்கிழமை உங்கள் விருப்பம் நிறைவேறும். சனி ஞாயிறில் குடும்பத்தின் நலனை ஒட்டி சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். திங்கள் முதல் உங்கள் செயல்கள் ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பிக்கும்.


அனுஷம்: உங்கள் செயல்களில் வேகமும் விவேகமும் இருக்கும். பிள்ளையின் திருமண முயற்சி நிறைவேறும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். எதிர்ப்புகள் விலகும்.


கேட்டை: திட்டமிட்டிருந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். அரசு வழியிலான செயல்கள் ஆதாயமாகும். வீட்டில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் தேடி வரும்.
தனுசு:


சுக்கிரன், கேது நன்மையை வழங்குவார்கள். அனுமனை வழிபட உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.


மூலம்: வெள்ளிக்கிழமை செலவுகளால் சங்கடம் தோன்றும். சனி முதல் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். முயற்சிகள் எளிதாக நிறைவேறும்.


பூராடம்: லாப ஸ்தான கேதுவால் உங்களின் நியாயமான செயல்கள் லாபமாகும். ஐந்தாமிட ராகுவால் பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும். சொத்துகள் வாங்கும்போது வில்லங்கம் பார்க்கவும்.


உத்திராடம் 1: வெள்ளிக்கிழமை வீண் செலவுகள் உண்டாகலாம் என்பதால் கவனம் தேவை. சனி முதல் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தினர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் ஆதாயம் தரும்.
மகரம்:


சூரியன், சுக்கிரன், புதன் நன்மையை வழங்குவார்கள். வராகியை வழிபட வெற்றியுண்டு.


உத்திராடம் 2, 3, 4: லாபஸ்தான சூரியனால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வெள்ளிக்கிழமை எதிர்பாராத வரவு உண்டு. சனி ஞாயிறில் செலவுகளால் சங்கடங்கள் ஏற்படும். திங்கள் முதல் முயற்சிக்கேற்ற லாபம் உண்டாகும்.


திருவோணம்: நீங்கள் விரும்பியதை அடையும் வாரம் இது. தொழிலில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த வகையில் லாபம் அதிகரிக்கும். சனி ஞாயிறில் செலவுகள் கூடும். அதன்பின் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.


அவிட்டம் 1, 2: எதிர்பார்த்த வருவாயால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி ஞாயிறில் வரவு செலவில் கவனம் தேவைப்படும். ஜென்ம சனியால் உடல் நலனில் சிறு பாதிப்புகள் உண்டாக வாய்ப்புண்டு என்பதால் கவனம் தேவை.கும்பம்:


ராகு, சூரியன், புதன் நன்மையை வழங்குவார்கள். மாரியம்மனை மனதில் எண்ணி வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.


அவிட்டம் 3, 4: நினைத்ததை சாதித்திடக் கூடிய வாரம் இது. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாகும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி பலிக்கும். வேலை தேடியவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும். வர வேண்டிய பணம் வந்து சேரும் ஞாயிறு திங்களில் செலவுகள் அதிகரிக்கும்.


சதயம்: மூன்றாமிட ராகுவால் உங்கள் தைரியம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். பத்தாமிட சூரியனால் அரசு வழியிலான முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். திங்கள் செவ்வாயில் பண நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.


பூரட்டாதி 1, 2, 3: வாழ்க்கைக்குரிய வழியைக் கண்டுபிடித்து முன்னேறுவீர்கள். வீடு வாகனம் வாங்க நினைத்த எண்ணம் நிறைவேறும். குடுபத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். திங்கள் செவ்வாயில் உங்கள் செயல்களில் கவனம் தேவை.மீனம்:


சனி, சுக்கிரன் நன்மையை வழங்குவார்கள். கபாலீஸ்வரரை மனதில் எண்ணி செயல்பட நன்மை அதிகரிக்கும்.


பூரட்டாதி 4: செவ்வாய்க்கிழமை வரை உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.


உத்திரட்டாதி: தன்னம்பிக்கையுடன் போராடி நினைத்ததை முடிப்பீர்கள். லாப ஸ்தான சனியால் உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதன் வியாழனில் புதிய வாகனம் நவீன பொருட்கள் என்று வாங்குவீர்கள்.


ரேவதி: வாரத்தின் முதல் ஐந்து நாட்களும் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். ஆற்றல் வெளிப்படும். லாபம் அதிகரிக்கும். ஆயுள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X