வடகிழக்கு பருவ மழை குறையும்: வானிலை மையம் கணிப்பு

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: நவ., 25 முதல் டிச., 8 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த நவ., 17 முதல் 23 வரை காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பதிவாகி
rain, tamilnadu, chennairains,  metrological department, pondycherry, balachandran, தமிழகம், மழை, வடகிழக்கு பருவமழை,  பாலச்சந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: நவ., 25 முதல் டிச., 8 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.



வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த நவ., 17 முதல் 23 வரை காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பதிவாகி உள்ளது.


இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 34 மி.மீ.,

பதிவான அளவு 3 மி.மீ.,

இது இயல்பை விட 91 சதவீதம் குறைவு.


16 மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. 22 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக பதிவாகி உள்ளது.


அக்.,1 முதல் நவ.,23 வரை காலகட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் பதிவான வடகிழக்கு பருவமழையின் அளவு 330 மி.மீ.,

இயல்பான அளவு 317 மி.மீ., இது இயல்பை விட 4 சதவீதம் அதிகம்


latest tamil news


கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் இயல்பை விட 17 சதவீதமாக இருந்த பருவமழையின் அளவு, தற்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி அமைந்துள்ளது.


நவ., 25 முதல் டிச., 8 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
qwqewq - Chennai,இந்தியா
25-நவ-202221:47:53 IST Report Abuse
qwqewq விஞ்சானிகளை நம்பி வந்ததண்ணீரையும் வீணாக கடலில் விட்டுவிட்டு இப்போது வானம் பார்த்த பூமியாக இருக்கவேண்டியுள்ளது . மோடி அரசு வாநிலை மையங்களை புனரமைக்கவேண்டும் இஸ்ரோவை சீரமைக்கவேண்டும் தினந்தோறும் ஒரு செயற்கைகோள், உலகிலிலேயே தோளினிடத்தும் வாய்ந்த செயற்கைக்கோளை விடவேண்டும் .
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
25-நவ-202219:54:42 IST Report Abuse
sridhar ஒரு இடத்தில பெய்து கெடுத்தது , ஒரு இடத்தில பெய்யாம கெடுத்தது .
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
25-நவ-202217:30:26 IST Report Abuse
ramesh தென் மாவட்டங்களாகிய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் ஒரு நாள் கூட கால மழை பெய்யவில்லை .இந்த வருடம் நிலத்தடிநீர் அவளவுதான் போல் தெரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X