சென்னை: பன்னாட்டு ஜவுளிகள் கருத்தரங்கை துவக்கி வைத்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உலக தரத்திலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்கும் முயற்சியில் உள்ளனர்.சென்னையில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விருதுநகர் ஜவுளி பூங்காவிற்கு நிலம் கையகபடுத்தும் பணிகள் நடக்கிறது. ஜவுளி துறையில் போட்டியானது இந்திய மாநிலங்களுக்கு இடையே இல்லாமல் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும்.ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் 3வது இடம் வகிக்கிறது. புதிய தொழில்கள் துவங்குவதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது.
ஜவுளி துறையில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாகவும் ஏற்றுமதியில் இந்தியாவில் தமிழகம் 3வது இடத்திலும் உள்ளது. 80 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. ஜவுளித்துறையின் எதிர்காலம் தொழில்நுட்ப அடிப்படையிலான உற்பத்தியை சார்ந்து உள்ளது.
இதனை நாம் மறந்துவிடக்கூடாது. மாமல்லபுரத்தில் 30 கோடி மதிப்பிட்டில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தியாவின் ஜிடிபி மதிப்பில் தமிழகம் 2வது பெரிய மாநிலம் 23 சதவீத விசைத்தறி நிலையங்கள் தமிழகத்தில் உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.