டில்லியில் பள்ளி வகுப்பறை கட்டுவதில் ரூ.1,300 கோடி ஊழல்: விசாரணைக்கு பரிந்துரை

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் 193 அரசு பள்ளிகளில் 2,405 பள்ளி வகுப்பறைகள் கட்டுவதில் மிகப்பெரிய முறைகேடு மற்றும் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என டில்லி அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை(டிஓவி) பரிந்துரை செய்துள்ளது.கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டில்லி அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளை கட்ட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். இதனையடுத்து,
aap, cvc, delhi, kejriwal government, arvind kejriwal government, delhi classroom construction, delhi classroom construction case, vigilance directorate, டில்லி, வகுப்பறைகள், ஊழல், ஊழல் கண்காணிப்பு அமைப்பு, விஜிலென்ஸ் கமிஷன்

புதுடில்லி: டில்லியில் 193 அரசு பள்ளிகளில் 2,405 பள்ளி வகுப்பறைகள் கட்டுவதில் மிகப்பெரிய முறைகேடு மற்றும் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என டில்லி அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை(டிஓவி) பரிந்துரை செய்துள்ளது.


கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டில்லி அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளை கட்ட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். இதனையடுத்து, பொதுப்பணித்துறை ஆய்வில் 194 பள்ளிகளில் 7180 வகுப்பறைகள் கட்ட வேண்டும் என தெரியவந்தது. இருப்பினும், அதற்கு ஈடாக 193 பள்ளிகளில் 2,405 வகுப்பறைகள் கட்டப்பட்டன.latest tamil news


பிறகு, 2019 ஆக.,25 அன்று மத்திய ஊழல் தடுப்பு கமிஷனுக்கு(சிவிசி) புகார் வந்தது. சில காரணங்களினால் செலவு 90 சதவீதம் அதிகரித்தது. டெண்டர் விடாமல் செலவை ரூ.500 கோடி அதிகரிக்க டில்லி அரசு அனுமதி வழங்கியது. மோசமான கட்டுமானம் , பணிகள் முடிக்காமல் என விதிமுறைகள் மீறப்பட்டன என கூறப்பட்டது.


இதனையடுத்து சிவிசி நடத்திய விசாரணையில், டெண்டர் அனுமதி வழங்கியது மற்றும் முன்மொழிந்ததில் விதிமுறைகள் மீறப்பட்டது. சிலரின் தூண்டுதலின் காரணமாக டெண்டர் மதிப்பு 17 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் அதிகரித்தது என கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும் கடந்த 2020 பிப்.,17 ல் சிவிசி அளித்த அறிக்கையில் வகுப்பறைகள் கட்டுவதில் நடந்த முறைகேடுகளை கண்டுபிடித்தது. இந்த அறிக்கை டில்லி அரசின் டிஓவி அமைப்பிடம் கருத்து கேட்டு அனுப்பி வைக்கப்பட்டது.


ஆனால், ஆளும் ஆம் ஆத்மி அரசு, இரண்டரை ஆண்டுகளாக கிடப்பில் போட்டது. பிறகு கவர்னர் சக்சேனா கடந்த ஆக., மாதம் அறிக்கை குறித்து தகவல் அளிக்க இவ்வளவு கால தாமதம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தும்படி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.


இதனையடுத்து டிஓவி அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆலோசகராக நியமிக்கப்படாத பாபர் மற்றும் பாபர் அசோசியேட்ஸ் நிறுவனம், ஒப்பந்தம் தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதுடன், டெண்டருக்கு பின் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய அப்போதைய அமைச்சரை தூண்டியதால் ஏற்பட்ட நிதி இழப்பு உள்ளிட்ட விதிமீறல் மற்றும் நடைமீறல் குறைபாடுகளை இந்த அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.


latest tamil news


194 பள்ளிகளில் 160 கழிப்பறைகள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 1214 கழிப்பறைகள் கட்டப்பட்டன. இதனால் அரசுக்கு கூடுதலாக 37 கோடி ரூபாய் செலவானது. பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கு மொத்தம் ரூ.989.26 கோடி மட்டுமே அனுமதிக்கப்பட்டது.


இதற்காக கோரப்பட்ட டெண்டர் மதிப்பு ரூ.860.63 கோடி. ஆனால், செலவு ரூ.1,315.57 கோடியாக உயர்ந்தது. இதற்கு புதிய டெண்டர் ஏதும் கோரப்படவில்லை. ஆனால், கூடுதல் பணிகளை மேற்கொண்டதில், பல பணிகள் முழுமை பெறவில்லை. அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன.


மேலும்,வகுப்பறைகள் கட்டுவதில், ரூ.1,300 கோடி அளவுக்கு நடந்த ஊழல் தொடர்பாக கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பொதுப்பணித்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சகங்கள் புகார் தொடர்பாக அளித்த விளக்கங்களையும் மத்திய ஊழல் தடுப்பு கமிஷனின் பரிசீலனைக்கும் அனுப்பி வைத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
26-நவ-202200:28:03 IST Report Abuse
M  Ramachandran 00000
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
26-நவ-202200:27:04 IST Report Abuse
M  Ramachandran குஞ்சிறி வாலின் புகழ் பரவுகிறது போராட்ட காரர்களுக்கு உதவு வதற்கு சகல வசதி யேஆஸ்ரப்படுத்தி கொடுக்க தான் செய்வதாக சொல்லுவார்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
25-நவ-202217:14:46 IST Report Abuse
DVRR அஹமது கெஜ்ரிவால் இப்படி பண்ணவில்லையென்றால் தான் சந்தேகப்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X