"நான் அவள் இல்லை" - கோர்ட்டில் கதறிய சுவாதி

Added : நவ 25, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
மதுரை: கடந்த 2015 ல் சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல் ராஜ் என்பவர் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்த விசாரணையில் ஆணவக்கொலை என தெரிய வந்தது. இதனையடுத்து 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சுவாதி என்பவர் முக்கிய சாட்சியாவார். ஒரு வீடியோவில்
Swathi, Gogulraj, Murder, கோர்ட், சேலம், சுவாதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: கடந்த 2015 ல் சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல் ராஜ் என்பவர் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்த விசாரணையில் ஆணவக்கொலை என தெரிய வந்தது. இதனையடுத்து 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சுவாதி என்பவர் முக்கிய சாட்சியாவார்.


ஒரு வீடியோவில் கோகுல்ராஜூவுடன் இருப்பது குறித்து திரையிட்டு சுவாதியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் சுவாதி " இது நான் அல்ல " - என பதில் அளித்தார். " உங்களை யே உங்களுக்கு தெரியவில்லையா நீதிமன்றத்தில் விளையாட வேண்டாம்" என எச்சரித்தனர்.


இதனையடுத்து சுவாதி கண்ணீர் விட்டு கதறி அழுதார் . தொடர்ந்து அவர் மயங்கிய நிலைக்கு சென்றதால் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டு வரும் 30ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். பிறழ்சாட்சியாக மாறி உண்மையை மறைப்பது கோர்ட் அவமதிப்பாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
25-நவ-202220:36:55 IST Report Abuse
M  Ramachandran முடிவில் அந்த பெண்ணையும் கழுத்தறுத்து மேலால் உலகத்திற்கு அந்த கும்பல் அனுப்பிவிடும்.நீதி மன்றம் போலீஸு ஒன்றும் செய்ய இயலாது .
Rate this:
Cancel
chandrakumar - tiruppur,இந்தியா
25-நவ-202218:17:36 IST Report Abuse
chandrakumar போனவன் போய்விட்டான் இருப்பவளாவது பிழைக்கட்டும். இப்போது அந்த பெண் என்ன சொல்கிறாளோ அது படி நீதி வழங்கப்படட்டும்...
Rate this:
sivan - seyyur,இந்தியா
25-நவ-202219:22:33 IST Report Abuse
sivan கதையாக இருக்கே சந்திரகுமாரின் மகன் அல்லது தம்பி யுவராஜால் படுகொலை செய்யப்பட்டாலும்.. சந்திரகுமார் போனவன் போய் விட்டான் என்றுதான் சொல்வீர்களா? உங்கள் சாதி ஆணவத்தை குப்பையில் கொண்டு போய் போடுங்கள். மனிதனை மனிதனாக பார்க்காத உங்கள் சாதி ... சமானம் நீங்களும் உங்கள் குப்பை சாதியும்...
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
25-நவ-202218:15:22 IST Report Abuse
GMM ஆணவக்கொலை, படுகொலை, காதல் கொலை, கருணைக்கொலை. என்று பலவிதமான கொலைகள் உள்ளன? 2015 வீடியோவில் உள்ளதை நினைவு கொள்வது கடினம். சாட்சியை வக்கீல் தான் அதட்டி விசாரிப்பார்?. நீதிமன்றம் எச்சரித்து விசாரித்தால் கலக்கம், மயக்கம் தான் வரும்?. போலீசார், வக்கீல், அரசியல், சமூகம் ... எப்படி எதிர் கொள்ள முடியும்? சாட்சி பயந்தால், பிற ஆதாரங்கள் தேட வேண்டும். வீடியோ விசாரணை போலீசார் களப்பணியை சுருக்கி விடும். இன்று போலீசார் மக்கள்,, பொது சொத்துக்களை பாதுகாப்பது குறைவு. அரசியல்வாதிகளை பாதுகாக்க விரும்புகின்றனர். பிறழ்ந்து சாட்சி பயத்தில்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X