ஓராண்டின் உச்சத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி: காரணம் தெரியுமா?

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
டில்லியை தலைமையிடமாகக் கொண்ட பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தாண்டு முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. கடந்த ஜூன் மாத பங்குச்சந்தை சரிவுக்கு பின்னர், பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் பெரியளவு எழுச்சி கண்டுள்ளது. இன்று (நவ., 25) வரை சுமார் 87 சதவீதம் உயர்ந்து கடந்த ஓராண்டில் இல்லாத உச்சநிலையை எட்டியுள்ளது.நேற்று வர்த்தக நேர முடிவில் ரூ.50.8 என
PNBshares,பஞ்சாப்நேஷனல்வங்கி, banknifty, பங்குச்சந்தை, வங்கிப்பங்குகள், யுடிஐ, UTI

டில்லியை தலைமையிடமாகக் கொண்ட பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தாண்டு முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. கடந்த ஜூன் மாத பங்குச்சந்தை சரிவுக்கு பின்னர், பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் பெரியளவு எழுச்சி கண்டுள்ளது. இன்று (நவ., 25) வரை சுமார் 87 சதவீதம் உயர்ந்து கடந்த ஓராண்டில் இல்லாத உச்சநிலையை எட்டியுள்ளது.

நேற்று வர்த்தக நேர முடிவில் ரூ.50.8 என முடிவடைந்த பஞ்சாப் நேஷனல் வங்கிப் பங்குகள், இன்றைய வர்த்தக நேரம் தொடங்கியது முதல் ஏறுமுகத்தில் சென்றது. 11 மணி நிலவரப்படி சுமார் 9 சதவீதம் உயர்ந்து கடந்த ஓராண்டில் இல்லாத புதிய உச்சமாக ரூ.55.4ஐ எட்டியது. பின்னர் அந்த நிலையில் லாபத்தில் உள்ள முதலீட்டாளர்கள் விற்பனையை தொடங்கியதால் 3.5% சரிந்து ரூ.53.45 என்ற நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கிப் பங்குகள் வர்த்தகத்தை நிறைவுச் செய்தன.


திடீர் ஏற்றத்திற்கு காரணம் என்ன?


latest tamil news


பஞசாப் நேஷனல் வங்கியின் செப்டம்பர் காலாண்டு முடிவு சமீபத்தில் வெளியானது. நிகர லாபம் கடந்த ஆண்டின் செப்., காலாண்டினை காட்டிலும் 63 சதவீதம் சரிந்து ரூ.411 கோடியாக உள்ளது. வாராக் கடன்களுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டதால் லாபம் குறைந்தது. கடந்த ஆண்டில் லாபம் ரூ.1,105 கோடியாக இருந்தது. அதே சமயம் வங்கியின் நிகர வட்டி வருமானம் 30% உயர்ந்து, ரூ.8,271 ஆக உள்ளது. காலாண்டு முடிவுகள் பங்கு விலையை உயர்த்தும் அளவுக்கு சாதகமாக இல்லை.

இந்நிலையில் தான் ஒரு செய்தி வெளியானது. பொதுத் துறை மியூட்சுவல் பண்ட் நிறுவனமான யுடிஐ.,யில் நான்கு வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன. அதில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று. பஞ்சாப் நேஷனல் வங்கி யுடிஐ., மியூட்சுவல் நிறுவனத்தில் 15.22 சதவீத பங்குகளை வைத்துள்ளது. அவை நல்ல லாபத்தில் உள்ளன. மொத்த பங்குகளையும் விற்பதற்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது. பங்கு விலக்கல் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கனிசமான நிதி கிடைக்கும். இந்த செய்தியால் இன்று உச்சநிலையை எட்டியது. யுடிஐ ஏஎம்சி பங்குகளும் சுமார் 6% உயர்ந்தன.


latest tamil news


இருப்பினும் எம்கே குளோபல் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கிப் பங்குகளுக்கு விற்பனை ரேட்டிங் தந்துள்ளது. 30 ரூபாயை டார்கெட் விலையாக குறித்துள்ளது. போட்டி வங்கிகளுடன் ஒப்பிடும் போது பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல்பாடு சாதாரண அளவிலேயே உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
26-நவ-202204:44:39 IST Report Abuse
Girija பங்கு சந்தையில் நுழைந்து ஏமாறாதீர்கள்,
Rate this:
Cancel
25-நவ-202219:24:09 IST Report Abuse
அப்புசாமி நீரவ் மிடி, சோக்ஸி போன்றவர்களின் கடன்களை வாராக்கடனாக்கி வங்கியின் கடன் பற்றிலிருந்து எடுத்தாச்சு. புதுசா தொழில் செய்ய வரவும் வெச்சாச்சு. இன்னும் கொஞ்சம் வருஷம் நல்லாப் போகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X