'ஆதார் தகவல்களை சரிபாருங்கள்' : மாநிலங்களுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ உத்தரவு

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | |
Advertisement
தனிநபரின் அடையாள சான்றாக, ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்வதற்கு முன் அவற்றை சரிபார்க்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ உத்தரவிட்டுள்ளது.மத்திய, மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. சமீபகாலங்களில் சிலர் போலி ஆதார் மூலம் மோசடி போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அடையாள சான்றாக ஆதார்
Aadhaar,Identity proof, UIDAI, States, India, ஆதார், அடையாள சான்று, உதய், இந்தியா, சரிபார்ப்பு


தனிநபரின் அடையாள சான்றாக, ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்வதற்கு முன் அவற்றை சரிபார்க்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ உத்தரவிட்டுள்ளது.



மத்திய, மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. சமீபகாலங்களில் சிலர் போலி ஆதார் மூலம் மோசடி போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அடையாள சான்றாக ஆதார் சமர்ப்பிக்கப்படும் போதெல்லாம், அடையாள ஆவணமாக ஏற்கும் முன் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு மாநில அரசுகளை யு.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று (நவ.24) வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-


”இ-ஆதார் உட்பட அனைத்து வகையான ஆதார்களிலும் கிடைக்கும் க்யூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி எந்த ஒரு ஆதாரையும் சரிபார்க்க முடியும். க்யூஆர் கோடு ஸ்கேனர் செயலி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களிலும் இலவசமாக கிடைக்கிறது. இது பொய்யான மற்றும் சமூக விரோத நோக்கத்திற்காக, ஆதாரை பயன்படுத்துவதை தடுக்கிறது.


latest tamil news


மேலும் 12 இலக்க எண்கள் ஆதார் அல்ல என்பதை மீண்டும் யு.ஐ.டி.ஏ.ஐ உறுதிப்படுத்தி கொள்கிறது. ஆதார் ஆவணங்களை தவறாக பயன்படுத்துவதை ஆஃப்லைன் சரிபார்ப்பு மூலம் கண்டறிய முடியும். இது ஆதார் சட்டத்தின் 35வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் மட்டுமின்றி, அபராதமும் விதிக்கப்படும்.



ஆதாரை சரிப்பார்ப்பது எப்படி?



இ-ஆதார், ஆதார் பிவிசி கார்டு மற்றும் எம் - ஆதார் என ஆதார் அட்டை எந்த வடிவில் இருந்தாலும், வைத்திருப்பவரின் ஒப்புதலுடன் ஆதார் எண்ணைச் சரிபார்க்க இயலும்.

இதற்கு முதலில் https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

லாக் இன் செய்து, உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்டசா குறியீட்டை அளிக்க வேண்டும்.

'Proceed and Verify Aadhaar' என்பதை கிளிக் செய்தால் ஆதார் அட்டை விவரங்களை சரிபார்க்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X