கனிமவளக் கொள்ளையை தடுக்க போராட்டம்: பாஜ

Added : நவ 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
காங்கேயம்: முத்தூரில், வெள்ளகோவில் வடக்கு ஒன்றிய பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக, பாஜ மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜ தலைவர் மங்களம் ரவி ஆகியோர் கலந்துகொண்டு, கட்சி கொடி ஏற்றி வைத்து, அலுவலகத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். பிறகு முருகானந்தம் கூறியதாவது: கனிமவளக் கொள்ளை என்பது தமிழகத்திலே பெரிய
பாஜ,bjp, கனிம வளம், கொள்ளை போராட்டம்,


காங்கேயம்:

முத்தூரில், வெள்ளகோவில் வடக்கு ஒன்றிய பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக, பாஜ மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜ தலைவர் மங்களம் ரவி ஆகியோர் கலந்துகொண்டு, கட்சி கொடி ஏற்றி வைத்து, அலுவலகத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.



பிறகு முருகானந்தம் கூறியதாவது: கனிமவளக் கொள்ளை என்பது தமிழகத்திலே பெரிய அளவில் நடைபெற்று வருகின்றது.அடுத்த கட்ட போராட்டம் இந்தக் கனிமவள கொள்ளையை கண்டித்து போராட இருக்கின்றோம். மத்திய அரசாங்கத்தின் திட்டத்தை நமது பிரதமர், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு இலவச திட்டங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று எண்ணி அறிவித்திருந்தார்.


ஆனால் கள நிலவரம் அப்படி இல்லை. இங்கே இருக்கின்ற பல்வேறு நபர்கள் அது யார் என்று இப்போது சொல்ல நான் விரும்பவில்லை. அந்த நபர்கள் எல்லாம் லஞ்சத்தை வாங்கி வருவதாக குற்றம் சாட்டினார். ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dfsdfsf - chennai,இந்தியா
26-நவ-202208:57:47 IST Report Abuse
dfsdfsf லச்சக்கணக்கான கோடிகள் கனிமங்களை கொள்ளையடிக்கும் அம்பானி அதானிகளை சிறையில் தள்ளவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X