புவனகிரி அஞ்சல் நிலையத்தில் மேற்கூரை பழுதால் பலரும் அச்சம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
புவனகிரி: புவனகிரி அஞ்சல் நிலையத்தில் மேற்கூரைகள் பழுதடைந்துள்ளதை சரி செய்து, அடிப்படை வசதிகளை விரிவு படுத்த வேண்டும். என ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன் அனுப்பியுள்ள மனு:கடலுார் மாவட்டம், புனகிரியில் இயங்கும் அஞ்சல் நிலையத்தில் சுற்றுபகுதியைச்

புவனகிரி: புவனகிரி அஞ்சல் நிலையத்தில் மேற்கூரைகள் பழுதடைந்துள்ளதை சரி செய்து, அடிப்படை வசதிகளை விரிவு படுத்த வேண்டும். என ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன் அனுப்பியுள்ள மனு:

கடலுார் மாவட்டம், புனகிரியில் இயங்கும் அஞ்சல் நிலையத்தில் சுற்றுபகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள்,சிறுசேமிப்பு, செல்வமகள் சேமிப்பு, நிரந்தர வைப்புத்தொகை உள்ளிட்ட பல்வேறு கணக்கு வைத்துள்ளனர். மேலும், தினசரி பல்வேறு தேவைகளுக்கு அஞ்சல் பயன்பாட்டினை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த அலுவலகத்தில் மேற்கூரைகள் ஆங்காங்கே பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்தில் வந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவற்றை சரிசெய்வதுடன், அலுவலகத்தின் வெளியில் நிரந்தர தபால் பெட்டி வைப்பதுடன், பழுதடைந்துள்ள ஜெனரேட்டரை சரி செய்து மின் நிறுத்த காலத்தில் பயன்பாட்டிற்கும், வாடிக்கையாளர்களுக்கு இருக்கையுடன், தேவையான மின் விசிரி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரிவு படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X