3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை அலுவலர் கைது

Added : நவ 25, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
பல்லடம் : பல்லடத்தில், 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை அலுவலர், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் பசும்பொன் தேவி. 59. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பி.டி.ஓ., அலுலகத்தில் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக வேலை பார்க்கிறார். பல்லடம் அடுத்த, பருவாய் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகன் செந்தில்குமார், 37; ஸ்டேஷனரி கடை
3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை அலுவலர் கைது

பல்லடம் : பல்லடத்தில், 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை அலுவலர், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் பசும்பொன் தேவி. 59. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பி.டி.ஓ., அலுலகத்தில் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக வேலை பார்க்கிறார். பல்லடம் அடுத்த, பருவாய் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகன் செந்தில்குமார், 37; ஸ்டேஷனரி கடை உரிமையாளர். இவரது மகள்கள் மதுநிஷா, 4 பிரதிக்ஷா, 2 ஆகியோருக்காக, சமூக நலத்துறை சார்பில், தமிழக அரசால் வழங்கப்படும் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற செந்தில்குமார் விண்ணப்பித்திறந்தார். இதற்காக, பசும்பொன்தேவி, 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.


இது குறித்து செந்தில்குமார், லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச பணத்தை கூகுல் பே மூலம் அனுப்புமாறு பசும்பொன்தேவி தெரிவிக்க, 1,500 ரூபாயை கூகுல் பே மூலமாகவும், பாக்கி தொகை, 1,500ஐ ரொக்கமாக தருவதாகவும் செந்தில்குமார் கூறினார்.


லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி, பல்லடம் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பசும்பொன் தேவியிடம், ரசாயனம் தடவிய, 1,500 ரூபாயை செந்தில்குமார் கொடுத்தார். தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சசிரேகா தலையிலான போலீசார், பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணைக்காக பல்லடம் பி.டி.ஓ., அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.


இதற்கிடையே, செந்தில்குமாரிடம் பசும்பொன் தேவி பேசிய வீடியோ, மற்றும் ஆடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. அதில், திட்டத்தில் இணைவதற்கான பத்திர செலவு உள்ளிட்ட வகையில், 3 ஆயிரம் ரூபாய் செலவாகும். மேற்படி, 'எங்களுக்கு ஏதாவது கொடுங்கள்' என, பசும்பொன்தேவி, செந்தில்குமார் இடம் கேட்கும் வீடியோ மற்றும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
26-நவ-202217:12:17 IST Report Abuse
INDIAN Kumar லஞ்சம் வாங்காதவர்கள் ரொம்ப கம்மி திராவிட மாடல் ஆட்சியில்
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
26-நவ-202210:48:27 IST Report Abuse
Tamilnesan வருங்கால அமைச்சர் தயாராகி விட்டார். இவருக்கு பதவி உயர்வு தரப்பட்டு, வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
26-நவ-202210:35:12 IST Report Abuse
தியாகு முப்பதாயிரம் கோடிகள் சுருட்டும் கோபாலபுர குடும்பத்தை விட்டுவிடுங்கள் வெறும் மூவாயிரம் ரூபாய் சுருட்டும் அரசு ஊழியரை கைது செய்யுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X