சீர்காழியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை: சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.. தன்னைப் பற்றி அவதூறாக பேசுபவர்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தரங்கம்பாடி கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி
சீர்காழியில் அதிமுக ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறை: சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.. தன்னைப் பற்றி அவதூறாக பேசுபவர்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தரங்கம்பாடி கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. கனமழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது அதன்படி நேற்று முதல் சீர்காழி தரங்கம்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதை கண்டித்தும் கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 வழங்க கோரியும் கால்நடைகள் மற்றும் வீடுகள் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 500 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க வினர் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் கன்டண கோஷங்களை எழுப்பினர், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது

ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது அப்போதைய மழை பாதிப்பிற்கு என்ன நிவாரணம் வழங்க கோரினாரோ? அதனை தற்போது வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3000 ரூபாய் மற்றும் விளைநிலங்களுக்கு ஏக்கர் 1 க்கு 30000 ரூபாய் வழங்க வேண்டும். மக்களால் புறக்கணிக்கப்பட்டு சுவர் ஏறி குதித்து ஓடியவர் ஓ.எஸ்.மணியன் என அமைச்சர் மெய்யநாதன் கூறியது தவறானது.


அன்று நடந்தது என்ன என்பதை அறியாமல் பலர் தவறாக பரப்பினர்.இவர்கள் இதனை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் .இப்படி பேசினால் அவர்கள் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வாய்க்கு பூட்டு போடப்படும் என தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X