கடந்த கால தவறுகளை இந்தியா சரி செய்கிறது: பிரதமர்

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: காலனித்துவ சகாப்தத்தில் சதியின் காரணமாக எழுதப்பட்ட வரலாற்றின் பக்கங்களில் தொலைந்து போன தனது பாரம்பரியத்தை கொண்டாடுவதன் மூலம் இந்தியா தனது கடந்த கால தவறுகளை சரி செய்து வருகிறது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.அசாமில் அஹோம் அரசாட்சி இருந்த 17 ம் நூற்றாண்டில் முகாலய மன்னர் அவுரங்கசீப்பின் படைகளை தோற்கடித்த தளபதி லச்சித் பாபுகானின் 400ம்
India,narendramodi, modi, pmmodi, pmnarendramodi, PM, இந்தியா, நரேந்திர மோடி, மோடி, பிரதமர்,

புதுடில்லி: காலனித்துவ சகாப்தத்தில் சதியின் காரணமாக எழுதப்பட்ட வரலாற்றின் பக்கங்களில் தொலைந்து போன தனது பாரம்பரியத்தை கொண்டாடுவதன் மூலம் இந்தியா தனது கடந்த கால தவறுகளை சரி செய்து வருகிறது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


latest tamil news


அசாமில் அஹோம் அரசாட்சி இருந்த 17 ம் நூற்றாண்டில் முகாலய மன்னர் அவுரங்கசீப்பின் படைகளை தோற்கடித்த தளபதி லச்சித் பாபுகானின் 400ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு என்பது இந்தியாவின் வரலாறு மட்டுமல்ல.


இந்தியாவின் வரலாறு என்பது அவர்களை எதிர்த்து போரிட்டதும், போர்களை முன்னின்று நிகழ்த்திய மாவீரர்கள் மற்றும் அவர்களின் தியாகங்களையும் சொல்வதே வரலாறு. அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வீரத்துடனும் துணிச்சலுடனும் நின்றது தான் இந்தியாவின் வரலாறு.


latest tamil news



ஆனால், துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்திற்கு பிறகும் காலனித்துவ ஆட்சியில் பின்னப்பட்ட சதி காரணமாக எழுதப்பட்ட வரலாறு தான் தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு பிறகு, நம்மை அடிமைகளாக்கிய வெளிநாட்டவர்களின் திட்டங்களை மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அவை நடக்கவில்லை.


latest tamil news


நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சர்வாதிகாரத்திற்கு எதிரான கதைகள் மறைக்கப்பட்டன. நீண்ட கால அடக்குமுறை ஆட்சியில், சர்வாதிகாரத்திற்கு எதிரான போரில் வெற்றி கிடைத்ததற்கான ஏராளமான வரலாறுகள் உள்ளன. அந்த வரலாறுகளை வெளிக்கொண்டு வராமல் விட்டதவறு தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-நவ-202211:24:58 IST Report Abuse
அப்புசாமி 2047 க்குள்ளாற டைம் மிசின் கண்டுபிடிச்சு, அதிலே கடந்த காலத்துக்குப் போய் தவறுகளை சரி செய்து விட்டு வந்துரலாம்
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
26-நவ-202208:26:05 IST Report Abuse
venugopal s மத்திய பாஜக அரசு கடந்த எட்டு வருடங்களில் செய்த தவறுகளை திருத்தவே இன்னும் பத்து வருடங்களுக்கு மேல் தேவைப் படுமே
Rate this:
Cancel
hari -  ( Posted via: Dinamalar Android App )
26-நவ-202204:58:16 IST Report Abuse
hari will be from first fool..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X