'டிவிட்டரில் கோல்டு, கிரே, ப்ளூடிக் விரைவில் அறிமுகம்' : மஸ்க்

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
டிவிட்டரில் பல்வேறு பயனர்களை வேறுப்படுத்தி காட்ட உதவும் வகையில், 3 வண்ணத்தில் குறியீடுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.சமூகவலைதளமான டிவிட்டரை கையகப்படுத்தியுள்ள எலான் மஸ்க், ப்ளூடிக் கணக்குகளுக்கு மாதம் 8 டாலர் கட்டண சேவையை அறிமுகம் செய்தார். புதிய சேவை, வரும் வாரம் முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில், தற்போது அதில் ஒரு மாற்றம்
Twitter, Elon Musk,Roll out, Gold, Grey, Blue Tick, டிவிட்டர், கோல்டு, கிரே, ப்ளூ டிக், அறிமுகம், எலான் மஸ்க்


டிவிட்டரில் பல்வேறு பயனர்களை வேறுப்படுத்தி காட்ட உதவும் வகையில், 3 வண்ணத்தில் குறியீடுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.சமூகவலைதளமான டிவிட்டரை கையகப்படுத்தியுள்ள எலான் மஸ்க், ப்ளூடிக் கணக்குகளுக்கு மாதம் 8 டாலர் கட்டண சேவையை அறிமுகம் செய்தார். புதிய சேவை, வரும் வாரம் முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில், தற்போது அதில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பல்வேறு வகையான பயனர்களை வேறுபடுத்தி அடையாளம் காணும் வகையில், கோல்டு, கிரே மற்றும் ப்ளூடிக் என 3 விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. போலி கணக்குகள், ஆள்மாறாட்டம் போன்ற சிக்கல்களின் காரணமாக ப்ளூடிக் கட்டண சேவை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக மஸ்க் அறிவித்தார். இருப்பினும், நவம்பர் இறுதியில் கட்டண சேவை துவங்கப்படுமென தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், எலான் மஸ்க் அடுத்தடுத்த டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அனைவருக்கும் ப்ளூடிக் என்பதற்கு பதிலாக, தற்போது இருந்து பலதரப்பட்ட பயனர்கள் வித்தியாசமான குறியீடுகளை பெறுவர். உதாரணமாக, நிறுவனங்கள் என்றால் கோல்டன் குறியீடும், அரசுகள் என்றால் கிரே குறியீடு மற்றும் தனிநபர்களுக்கு ப்ளூ வண்ண குறியீடு வழங்கப்படும். வலி. ஆனால் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.


latest tamil newsமற்றொரு பதிவில், தனிநபர்கள் அந்த நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்டால், அவர்கள் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்ட, அதற்குரிய சிறிய லோகோவை வைத்திருக்க முடியும். இது தொடர்பாக வரும் வாரம் விரிவான விளக்கத்தை அளிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


பின்னணி என்ன :மஸ்க், தனது ப்ளூ டிக் குறியீடுக்கான சந்தாவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே, டிவிட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழு , கட்டண சேவையால் ஏற்படும் பாதகமான விளைவுகளை , 7 பக்க பரிந்துரைகளின் பட்டியலை தயாரித்தது. அதில், போலி கணக்குகள் மற்றும் ஆள்மாறாட்டம் தொடர்பான அச்சுறுத்தல்கள் இருக்கலாம்.


மேலும் ப்ளூ டிக்கிற்கு பணம் செலுத்த வேண்டாம் என்று முடிவு செய்தால், அதிக எண்ணிக்கையிலான கணக்குகளை நீக்குவதற்கு, அதிக செயல்பாடு தேவைப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். இது தவிர, பயனர் கணக்குகளில் இருந்து சரிபார்க்கப்பட்ட பேட்ஜ்களை அகற்ற, டிவிட்டருக்கு தானியங்கி வழி இல்லை என்று குழு எச்சரித்திருந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-நவ-202203:07:39 IST Report Abuse
Kasimani Baskaran டிவீட்டிலும் கூட கலர் என்று பாகுபாடா
Rate this:
Cancel
Narayana Swami - Chennai,இந்தியா
26-நவ-202200:45:19 IST Report Abuse
Narayana Swami எலன் மாஸ்க் அகல கால் வைக்கிறார். கண்டிப்பாக தோல்வி அடையும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X