முதலீட்டாளர்களின் ரூ.2 லட்சம் கோடியை விழுங்கிய டிஜிட்டல் நிறுவனங்கள்!

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | |
Advertisement
கடந்த ஓராண்டில் பங்குச்சந்தைக்கு வந்து நிதி திரட்டிய தொழில்நுட்பம் சார்ந்த 6 புதுயுக நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் விழுங்கியுள்ளன. பாலிசிபஜார், பேடிஎம், கார்டிரேட், நைக்கா, சொமேட்டோ, டெல்லிவெரி ஆகியவை தான் அந்நிறுவனங்கள்.இந்தியப் பங்குச்சந்தைகளில் 2021 ஐபிஓக்களுக்கான காலமாக அமைந்தது. ஏராளமான புதிய நிறுவனங்கள் பங்கு வெளியீடு மூலம் நிதி
NewAgeTechFirms, DigitalComapanies, Paytm, pbfintech, zomato, புதுயுக_நிறுவனங்கள், லாபம், நஷ்டம், பங்குகள்

கடந்த ஓராண்டில் பங்குச்சந்தைக்கு வந்து நிதி திரட்டிய தொழில்நுட்பம் சார்ந்த 6 புதுயுக நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் விழுங்கியுள்ளன. பாலிசிபஜார், பேடிஎம், கார்டிரேட், நைக்கா, சொமேட்டோ, டெல்லிவெரி ஆகியவை தான் அந்நிறுவனங்கள்.

இந்தியப் பங்குச்சந்தைகளில் 2021 ஐபிஓக்களுக்கான காலமாக அமைந்தது. ஏராளமான புதிய நிறுவனங்கள் பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட வந்தன. நிறுவனம் லாபம் ஈட்டுகிறதா இல்லையா என்பது குறித்து எல்லாம் கவலையின்றி ஏராளமான முதலீட்டாளர்கள் எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு இருக்கும் என நம்பி புதுயுக தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்தனர்.


latest tamil news


இந்தாண்டு தொடக்கத்தில் பணவீக்கம் அதிகரித்து பொருளாதார சூழல் முற்றிலும் மாறிப்போனது. இதனால் லாபமீட்டாத நிறுவனங்களை உதறித் தள்ளிவிட்டு பழைய முறையில் நல்ல லாப வரம்பு கொண்ட நிறுவனங்களை முதலீட்டாளர்கள் தேடிச் சென்றனர். விளைவு புதுயுக தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர் சரிவைச் சந்தித்தன.

அதில் பேடிஎம் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்த நிறுவனம். சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இந்நிறுவனம் இழந்துள்ளது. நைக்கா நிறுவனம் இதுவரையிலான உச்சத்திலிருந்து சுமார் 50 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது. நைக்கா இழந்த சந்தை மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகும். சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் சுமார் 40 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது. இந்நிறுவனம் இழந்த சந்தை மதிப்பு ரூ.41,000 கோடி. இதே போல் பாலிசிபஜார் மற்றும் கார் டிரேட் நிறுவனம் பங்குச்சந்தைக்கு வந்தது முதல், முறையே ரூ.37,000 கோடி மற்றும் ரூ.4,500 கோடி இழந்துள்ளது.


latest tamil news


இது குறித்து பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கூறுவது என்னவெனில், “ பெரும்பாலான இந்த புதுயுக நிறுவனங்கள் வென்ச்சர் நிதி சேகரிப்பு கட்டங்களை பூர்த்திச் செய்யாமல் அவசர அவசரமாக பங்குச்சந்தைக்கு வந்தன. இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடுகள் குவிந்துக்கொண்டிருந்த சமயத்தில் இந்த டிஜிட்டல் நிறுவனங்கள் உள்ளே வந்தன. அந்த சமயத்தில் மிக அதிக மதிப்பீடுகள் கொண்ட நிறுவனங்களும் வெற்றி பெறும். இது கடந்த காலங்களில் பல முறை நடந்துள்ளது. தற்போது புதுயுக டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் இது நடந்திருக்கிறது. பின்னர் சந்தை எதிர்மறையாக மாறின, அப்போது யதார்த்தம் புரிந்து முதலீடுகள் வெளியே எடுக்கப்பட்டன. இதனால் கீழ் நோக்கிச் சரிந்துள்ளன. பேடிஎம், சொமேட்டோ போன்ற நிறுவனங்கள் லாபமீட்ட நீண்ட பாதையில் பயணிக்க வேண்டும்” என்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X