வாழப்பாடி:சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்த, பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர், கலைஞரின் புகழ் தலைமையில் கலை திருவிழா நடத்தப்பட்டது. இன்று நடைபெற்ற கலை திருவிழாவில் இசை, கட்டுரை, பேச்சு, நடனம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதில் சிறப்பாக செய்து முதல் இடங்களை பிடித்த மாணவர்கள், அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் கோபிநாத், இணைச்செயலாளர் குணாளன், பொருளாளர் சுப்பிரமணி, தலைமை ஆசிரியர் ரவிசங்கர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.