வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெட்டா: சவுதி அரேபியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடலோர நகரமான ஜெட்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கனமழை தொடங்கியபோதே, மெக்கா யாத்திரை செல்லும் முக்கிய சாலை மூடப்பட்டது. கனமழை நின்ற பிறகே சாலை திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டது. மேலும் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
![]()
|
சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். பல பகுதிகளில் மோசமான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பல விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சில விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றுள்ளன. சில விமானங்கள் வேறு நகரங்களுக்கு மாற்றிவிடப்பட்டன.