குளிர்காலத்தில் வறண்ட காற்றால் முடி உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. குளிர் காலத்தில் பலரும் சருமப் பராமரிப்பு அளவிற்கு கூந்தலுக்கு முக்கியத்துவம் தந்து கவனிப்பதில்லை. ஆனால் இந்த சமயத்தில் தான் முடி வறட்சி, முடி உடைதல், உச்சந்தலையில் அரிப்பு உள்ளிட்டவை ஏற்படும். அதனால் உங்களது தலைமுடிக்கும் சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது.
தலைமுடிக்கு ஏற்படும் பாதிப்பை நீங்கள் தவிர்க்க சில குறிப்புகளை பார்க்கலாம்.
உங்களது தலைமுடியை வேர் முதல் நுனி வரை ஆரோக்கியமாக பாதுகாக்க தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்களது தோலின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.
பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பூசணி விதைகள் உள்ளிட்டவை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்திலும் புரதச்சத்து அதிகம் உள்ளதால் உங்கள் முடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்றும். மேலும் முடி உடைதல் குறைந்து, முடியின் பளபளப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.
அதிகம் சூடான தண்ணீரில் தலை குளித்தால் முடி உடைதல் மற்றும் உச்சந்தலையில் தோலுரிதல் ஏற்படக்கூடும். வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி முடியை அலசவும்.
![]()
|
நீங்கள் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் முடியின் நுனிகளில் ஓரிரு துளிகள் தேங்காய் எண்ணெய் வைக்கவும். இது உங்கள் முடி வெடிப்பதை தடுக்கும்.
குளிர்காலத்தில் குளிர்ந்த வெப்பநிலை காரணமாக தலைமுடி உலர்த்துவது கடினமான ஒன்றுதான். ஈரத்துடன் முடியை விடுவதால் முடி உதிர்தல், நிறம் மாறுதல், முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் தலைமுடியை முழுவதும் உலர்த்துவது மிகவும் அவசியம். இது குளிர்கால முடி பராமரிப்பு குறிப்புகளில் முக்கியமான ஒன்று.