சென்னை :''அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவுக்கு இடமில்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:பா.ஜ., கொள்கை வேறு. எங்கள் கொள்கை வேறு. பா.ஜ., தேசிய கட்சி, தோழமை கட்சி என்ற அடிப்படையில், எங்கள் அணுகுமுறை இருக்கும்.அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி அமையும். அந்தக் கூட்டணியில் பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு, எந்த நிலையிலும் இடமில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.