மதுபான கொள்கை வழக்கு : சி.பி.ஐ., குற்றபத்திரிகை தாக்கல்

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | |
Advertisement
புதுடில்லி : டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி நடக்கிறது. இதில் மதுபான கொள்முதல், விற்பனை, வரி விதிப்பு உள்ளிட்டவை தொடர்பான, புதிய கொள்கையில், மதுபான தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றம்
மதுபான கொள்கை , சிபிஐ, குற்றபத்திரிகை

புதுடில்லி : டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி நடக்கிறது. இதில் மதுபான கொள்முதல், விற்பனை, வரி விதிப்பு உள்ளிட்டவை தொடர்பான, புதிய கொள்கையில், மதுபான தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு, புதுடில்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டார்.


latest tamil news

கலால் துறையை கவனிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட, 15 பேர் மீது கடந்த ஆகஸ்டில், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியா சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. இன்று ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பெயர் இடம் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X