வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்தது.
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பம்ப்வெல் பகுதியில், சில நாட்களுக்கு முன், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், பயங்கரவாதி முகமது ஷாரிக், 24, ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம், 60, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.
![]()
|
இந்நிலையில் மங்களூரு சம்பவத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜாகிர் நாயக் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியதாக , என்.ஐ.ஏ., வழக்குப்பதிவு செய்தது. பண மோசடி வழக்கினை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. தற்போது மலேஷியாவில் பதுங்கி வாழ்வதாக கூறப்படுகிறது. இவரை கைது செய்து இந்தியா கொண்டு வர சர்வதேச போலீஸ் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.
இந்த சூழ்நிலையில் மங்களூரு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதி முகமது ஷாரிக், ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டதாகவும், இதையடுத்து மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.