நாக்பூர், “அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் 15 ஆண்டு பழைய வாகனங்கள் அழிக்கப்பட்டு கழிவுகளாக்கப்படும். இதற்கான வழிகாட்டு கொள்கை மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது,” என, மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று நடந்த வேளாண்மை கண்காட்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:
அரசு அலுவலகங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படும் பழைய வாகனங்களை கழிவுகளாக மாற்ற, வாகன பயன்பாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
![]()
|
அனைத்து மாநில அரசு களும் இந்தக் கொள்கையைப் பின்பற்றி, பழைய வாகனங்களை அழித்து கழிவுகளாக்கி சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் ஆண்டு தோறும் அறுவடைக்குப் பின் வைக்கோலை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. தற்போது வைக்கோலில் இருந்து 'பயோ எத்தனால்' மற்றும் 'பயோபிட்டுமன்' தயாரிக்கப்படுவதால், இனி வைக்கோலை எரிக்க வேண்டிய அவசியம் இல்லை. விவசாயிகள் வெறும் உணவு உற்பத்தியாளர்களாக மட்டுமின்றி, எரிபொருள் உற்பத்தியாளர்களாகவும் மாறி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.