சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

புனிதத்துவம் வாய்ந்த அரசியல் சாசனம்

Added : நவ 26, 2022 | |
Advertisement
கிட்டத்தட்ட 200 ஆண்டு காலத்துக்கும் அதிகமான காலனி ஆதிக்க ஆட்சிக்குப் பின், 1947, ஆக., 15 அன்று நள்ளிரவில் சுதந்திரம் அடைந்தது, இந்தியா. லட்சக்கணக்கான மக்களின், நீண்ட கால சுதந்திரப் போராட்டம் மற்றும் அவர்களின் அளப்பரிய தியாகங்களின் விளைவாக, மிகவும் அரிதான சுதந்திரத்தை நம் நாடு அடைந்தது.சுதந்திரத்துக்காக உயிர் நீத்த ஆயிரக்கணக்கானோர் அல்லது வெஞ்சிறையில் அடைபட்டு,
 புனிதத்துவம் வாய்ந்த அரசியல் சாசனம்

கிட்டத்தட்ட 200 ஆண்டு காலத்துக்கும் அதிகமான காலனி ஆதிக்க ஆட்சிக்குப் பின், 1947, ஆக., 15 அன்று நள்ளிரவில் சுதந்திரம் அடைந்தது, இந்தியா. லட்சக்கணக்கான மக்களின், நீண்ட கால சுதந்திரப் போராட்டம் மற்றும் அவர்களின் அளப்பரிய தியாகங்களின் விளைவாக, மிகவும் அரிதான சுதந்திரத்தை நம் நாடு அடைந்தது.

சுதந்திரத்துக்காக உயிர் நீத்த ஆயிரக்கணக்கானோர் அல்லது வெஞ்சிறையில் அடைபட்டு, சித்ரவதைகளை அனுபவித்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மட்டுமே சுதந்திரம் பற்றிய கனவிருக்கவில்லை.

இந்த பழமையான, பெருமைமிகு தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் கனவாகவும் அது திகழ்ந்தது. காலனி ஆதிக்கத்துக்கு முந்தைய காலத்தில், 2,000 ஆண்டுகளுக்கு உலகளாவிய பொருளாதார மற்றும் கலாசார ஆற்றல் மையமாக அடையாளம் காணப்பட்ட இந்தியா, சுதந்திரம் பெற்ற போது, வறுமையால் சூழப்பட்டிருந்தது.

நவீன, ஜனநாயக, ஒன்றுபட்ட இந்தியக் குடியரசுக்கு அடித்தளமிட முனைந்த நம் நாட்டின் அரசியல் சாசனத்தை வரைய ஆயத்தப்பட்ட நம் தலைவர்களுக்கு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் நிலவிய அசாதாரண சூழலும், மிகக் கடுமையான சவால்களை முன் நிறுத்தியது.


ஓட்டளிக்கும் உரிமைஇளமையான குடியரசு என்ற பரிசோதனை நடவடிக்கை, எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்ற சந்தேகம், குறிப்பாக, கல்லாமை மற்றும் வறுமையால் ஆழமாக பீடிக்கப்பட்ட ஒரு நாடு, நவீன ஜனநாயக அமைப்புகள் மற்றும் முறைகளில் எந்த அனுபவமும் பெற்றிராத ஒரு நாடு.

தன் அரசாட்சிக்கு ஜனநாயகக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள விரும்புவது குறித்தும், வயது வந்த அனைவருக்கும் தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை வழங்குவது குறித்தும், சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

எனினும், நம் நாட்டின் பல பகுதிகளில், ஆதாரபூர்வமாக நிலவிய சமூகப் பொருளாதார பின்னலமைப்பால், நன்கு நெய்யப்பட்ட நம் ஜனநாயக அமைப்புகளின் பலம் மற்றும் 2,000 ஆண்டுகள் பழமையான நம் ஜனநாயக மாண்புகள் ஆகியவற்றின்பால் கொண்டிருந்த ஆழமான புரிதலின் காரணமாக, அரசியல் சாசனத்தை உருவாக்கிய நம் முன்னோர், அத்தகைய அந்தகார இருளை பரப்பிய சந்தேக நோய் பிடித்தவர்களின் கருத்துக்களால், எந்தவிதக் குழப்பமும் கொள்ளவில்லை.

அன்னிய படையெடுப்புகளாலும், பழமைவாத அடக்குமுறைகளின் சுரண்டலாலும், அரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியாலும் பாதிக்கப்படாது நிலைத்த நம் 'கிராமக் குடியரசுகள்' வசமிருந்து பெற்ற பங்கேற்பு வடிவங்களால் உருவான பாரம்பரிய, வலுவான ஆட்சிமுறை பற்றிய மிக ஆழமான புரிதலை, அரசியல் சாசன சபையின் உறுப்பினர்கள் பெற்றிருந்தனர்.

சராசரி இந்தியக் குடிமகனின் ஜனநாயக உணர்வுகளின் மீது, நம் அரசியல் சாசனத்தை வரைந்தோர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை தான், மற்ற எல்லாவற்றை விடவும் மிக முக்கியமாக அவர்களை வழிநடத்தியது.

'ஜனநாயகத்தின் தாய்' என்று இந்தியா அழைக்கப்பட அனைத்து உரிமைகளும், தகுதிகளும் உள்ளது. ஜனநாயக ஆட்சி முறையின் கீழ் பலகாலமாக, மாறும் சூழல்களுக்கு ஏற்ப, நம் நாடு நிச்சயம் நிலைபெறும் என்ற நம் அரசியல் சாசன வரைவாளர்களின் நீங்காத நம்பிக்கைக்கு சற்றும் மாறாமல் நாம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜனநாயக அரசமைப்பில் நீடித்துப் பெற்ற அனுபவம், சாட்சியமாக உள்ளது.

நம் அரசியல் சாசனத்தின் அடிப்படையாக நின்று நிலைக்கும் கொள்கைகளும், கோட்பாடுகளும் நம் நவீன வரலாற்றின் 'அமிர்த காலத்தில்' நம் நம்பிக்கை மிகுந்த நாட்டை தொடர்ந்து வெளிச்சப் பாதையில் வழிநடத்தி வருகிறது.

அரசியல் சாசன சபைக்கு தலைமை தாங்கிய டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் அரசியல் சாசன வரைவுக் குழுவுக்கு தலைமை தாங்கிய பாபாசாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் ஆகியோரின் அயராத முயற்சிகளின் மூலமாகத் தான், நமக்கு நம் இந்திய அரசியல் சாசனம் கிடைத்தது.

இந்திய மக்களின் விருப்பங்களை முழுமனதாக உள்வாங்கிய நம் அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு புனித ஆவணமாகப் போற்றப்படுகிறது. உலகில், குறிப்பாக அரசியல் சாசனத்தின் வாழ்நாள் பெரும்பாலும், மிகவும் குறைவாக உள்ள புதிதாக விடுதலை அடைந்த வளர்ச்சி அடைந்த நாடுகளின் உலகில், இது ஒரு மிகப் பெரிய சாதனை.


வேற்றுமையில் ஒற்றுமைநம் அனைத்து குடிமக்களின் மரியாதை மற்றும் நலன் ஆகியவற்றை எழுத்திலும், உணர்விலும் முழுமையாக உயர்த்துவதாக, நம் அரசியல் சாசனம் உள்ளது என்பதோடு, இந்தியாவில் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான ஜனநாயகத்துக்கான அடித்தளங்களை வலுப்படுத்துவதற்கு, கடந்த பல 10 ஆண்டுகளில் அரசின் அனைத்து அங்கங்களும் முழுமையாக பங்களித்துள்ளன.

அரசுகள், அரசின் அனைத்து அங்கங்கள், சுதந்திரமான பத்திரிகை துறை, அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஆகியோரால் நம் அரசியல் சாசனம் அறியப்பட்டு, விரித்து பொருளுரைக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் விதம், வறுமை, கல்லாமை, பசிக்கொடுமை.

வளர்ச்சிக் குறைபாடு ஆகியவற்றை ஒழித்த நாடாக மாறுவதற்கு, ஓய்வின்றி உழைப்பதிலும், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கும், வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் வழியமைத்துள்ளது.

சுருக்கமாக, அனைத்து குடிமக்களுக்கும் நீடித்து நிலைத்த, சரிநிகர் சமான வாழ்க்கைத் தரத்தை தீவிரமாக மேம்படுத்தவல்ல நவீன, குடிமக்கள் நலன்சார், நாடாகத் திகழும் நம் பயணத்தில் அரசியல் சாசனம் பெரும் வரமாக விளங்குகிறது. பொருந்தும் நீக்குப்போக்கான தன்மை தான் அரசியல் சாசன ஆர்டிகிள்கள் மற்றும் பிரிவுகளின் தொகுப்பாகத் தான் இந்திய அரசியல் சாசனம் அதிகம் விளங்குகிறது.

நம் இந்திய அரசியல் சாசனத்தின் மிக முக்கியமான அம்சங்களின் ஒன்று, அது மாற்றத்துக்கு உட்படுத்த முடியாத, கடினத்தன்மை உடையதல்ல... மாறாக நம் நாடு, நாகரிகம், ஆகியவற்றின் அடிப்படை விழுமியங்களை உள்வாங்கிய புனிதம் பொருந்திய ஒரு வாழும் ஆவணம்.

மேலும், விரைவாக மாறிவரும் உலகில் பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளை ஏற்று கிரகிக்கும் வகையில், நீக்குபோக்கான தன்மை கொண்ட கட்டமைப்பு எனச் சொல்வது, அரசியல் சாசனத்தின் இந்த உள்ளார்ந்த காலம்தோறும் மக்கள் நலன்சார் கொண்டுவர பார்லிமென்டுக்கு வாய்ப்பை உருவாக்கியதோடு, அரசியல் சாசன அம்சங்களை ஆக்கபூர்வமாக விரித்து, பொருளுரைக்க உயர்வான நாட்டின் நீதித்துறைக்கும் வாய்ப்புகளை வழங்கியது.

அரசியல் சாசனத்தின் கட்டமைப்பு உருவாக்கப்பட்ட விதம் இணைப்பதாகவும், ஆற்றல்வாய்ந்த சூழலில் தொடர்ந்து வளர்ச்சி அடையும் விதமாகவும், வலுவான நிறுவனங்கள் மற்றும் வலுவான ஆற்றல் வாய்ந்த 140 கோடி மக்கள் சக்தியால் நிறைந்ததாகவும் உள்ளது.

அரசியல் சாசனத்தின் 'அடிப்படைக் கட்டமைப்பு' ஒரு நங்கூரம் போல் ஆழமாகவும், நம் நாட்டை உலக நாடுகளின் மத்தியில் தலைமைப் பொறுப்பேற்கும் வகையில் கொண்டு செலுத்தும் சக்தியை வழங்குவதாகவும் உள்ளது.

சட்டத் திருத்தங்களை சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், நம் நாட்டின் இதுவரையிலான பயணம் மற்றும் பல துறைகளில் அடைந்துள்ள சாதனைகள் குறித்து, நாம் உரிமையோடு பெருமை கொள்ளலாம்.

'அமிர்த காலத்தில்' நுழையும் நேரத்தில் நம் மக்கள் மீதும், நம் அரசியல் சாசனம் மீதும், நாம் நம் நம்பிக்கைகளை மறுபடியும் உறுதியாக அர்ப்பணிப்பதோடு, புதிய தற்சார்புடைய, வலுவான, ஒன்றுபட்ட, மனிதாபிமானம் மிகுந்த நாட்டை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் எட்டும் நம் கனவுகளை நனவாக்கும் பயணத்தையும், மறு அர்ப்பணிப்புடன் நாம் புதுப்பிப்போம்!

இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாற்றத் தீர்மானம் ஏற்பது, காலனி ஆதிக்க மனோபாவத்தை விட்டொழிப்பது, நம் மரபு மற்றும் பாரம்பரியத்தில் பெருமை கொள்வது, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது, குடிமக்களிடையே கடமை உணர்வை மேம்படுத்துவது ஆகிய அமிர்த காலத்தின் ஐந்து இலக்குகள், 1949, நவ., 26ல் நம் அரசியல் சாசனம் ஏற்கப்பட்டபோது கொண்டிருந்த நோக்கங்களை அடைய உறுதியாக உதவும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


கனவு காணும் இந்தியாகடந்த 1931லேயே மகாத்மா காந்தியடிகள் 'அடிமைத்தளையில் இருந்து இந்தியாவை விடுதலை செய்து ஆதரிக்கும் அரசியல் சாசனத்தை, உருவாக்க முனைவேன்.

பரம ஏழைகளும், இந்த நாட்டை தங்கள் நாடாகக் கருதும் வகையிலும், அவர்கள் தம் வலுவான குரலை ஓங்கி ஒலிக்கும் ஒரு இந்தியா; மக்களில் உயர் வகுப்பினர் அல்லது தாழ்வான வகுப்பினர் என்ற வேற்றுமை இல்லாத ஒரு இந்தியா.

'அனைத்து சமூகத்தினரும், முழுமையான நல்லிணக்கத்துடன் வாழத்தகுந்த இந்தியா; மற்றும் தீண்டாமைக் கொடுமை முற்றிலும் இல்லாத இந்தியாவை உருவாக்க உழைப்பேன்.

மற்ற உலக நாடுகளுடன் நாம் அமைதியாக, சுரண்டாமலும், சுரண்டப்படாமலும், வாழ முடியும்... இத்தகைய இந்தியாதான் நான் கனவு காணும் இந்தியா' என்று சொன்னார்.

அரசியல் நடுநாயகமாக, இறையாண்மை மற்றும் நம் தேச வாழ்வின் பொதுமக்களை இருத்த முயன்ற ஒரு அரசியல் சாசனத்தை, சுதந்திரப் போராட்டத்தின்போது, நம் அரசியல் தலைவர்கள் உருவாக்கினர்.

பொதுமக்களின் நலன் மற்றும் மரியாதை நம் அரசியல் சாசனத்தின் இதயமாகத் திகழ்கிறது. அமிர்த காலத்தின் 'ஐந்து இலக்குகள்' மூலமாக நாம் இதை அடைய முடியும் என்பதோடு, அதை எட்டுவதற்காக முழுமனதுடன் உழைக்க வேண்டும்.

அப்போது தான் நம் ஜனநாயக விழுமியங்கள் முழுவதுமாக மலர்ந்து மணம் வீசும்; எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களின் பலன்களும், கனவுகளும் நனவாகும். அப்போது தான், இந்தியாவை ஒரு முன்னணி உலக நாடாக- 2,000 ஆண்டுகளாக சட்டபூர்வமாக ஏந்தியிருந்த தகுதி நிலையை, மறுநிர்மாணம் செய்யமுடியும்.


பிரிக்க இயலாத பந்தம்நம் செயல்திட்டத்தில், மக்கள் அரசியல் சாசனத்துக்கு வழங்கும் அதிகாரத்தை, ஒத்த அளவில் அரசியல் சாசனம் மக்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.

ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்றாகவும், விரிவாகவும் எழுதப்பட்டிருந்தாலும், நிறுவனங்கள் மற்றும் மக்கள் இடையே பரஸ்பரம் இணைப்பை உருவாக்கத் தவறி விட்டதென்றால், அதற்கு அதிகம் அர்த்தமுள்ளதாக இருக்காது என்பதை அரசியல் சாசனத்தின் வரைவாளர்கள் உணர்ந்திருந்தனர்.

அரசியல் சாசன சபையில் அங்கம் வகித்த பெருமக்களின் தொலைநோக்கு, அறிவுடைமை மற்றும் அபார திறன்கள்தான் அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் உதவியது; அதனால் தான் அதன் ஏற்புத்திறன் தலைமுறைகள் தாண்டியும் வளர்ந்து வருகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின்பால் நம் உணர்வுபூர்வமாக, பிரிக்க இயலாத ஒரு பந்தத்தை உருவாக்கியுள்ள, கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலான, நம் பயணத்தின் ஒவ்வொரு கடினமான சூழல்களிலும், நம் அரசியல் சாசனத்தின் கொள்கைகள் மீதான நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டை புதுப்பித்துள்ள, நம் நாட்டின் குடிமக்களுக்கு தலைவணக்கம் செலுத்தும் நேரமும் இதுவேதான்!

- -ஓம் பிர்லா

லோக்சபா சபாநாயகர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X