நேபாளம் தேர்தல் நிலவரம் : மீண்டும் ஷேர் பகதூர் துபா ஆட்சி

Updated : நவ 26, 2022 | Added : நவ 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
காத்மாண்டு : நேபாளத்தில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லி., மற்றும் 550 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட ஏழு மாகாண சட்டசபைக்கு கடந்த 20-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 165 எம்.பி.க்களை தவிர விகிதாச்சார முறைப்படி 110 எம்.பி.க்களுக்கான
நேபாள். தேர்தல் நிலவரம் ,  ஷேர் பகதூர் துபா ஆட்சி

காத்மாண்டு : நேபாளத்தில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



நம் அண்டை நாடான நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லி., மற்றும் 550 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட ஏழு மாகாண சட்டசபைக்கு கடந்த 20-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 165 எம்.பி.க்களை தவிர விகிதாச்சார முறைப்படி 110 எம்.பி.க்களுக்கான தேர்தல் நடந்தது. அதே நேரம் 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 உறுப்பினர்களை தவிர 220 பேர் விகிதாசார முறைப்படியும் தேர்தல் நடந்தது. . நாடு முழுதும் உள்ள 1.79 கோடி வாக்காளர்களுக்கு 22 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன; 61 சதவீத ஓட்டுகள் பதிவாகின.


latest tamil news


ஓட்டு எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. ஓட்டுச் சீட்டு முறையில் தேர்தல் நடப்பதால் ஓட்டு எண்ணிக்கை முடிந்து முழுமையான முடிவை அறிவிக்க தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று வரையிலான நிலவரப்படி 110 இடங்களில் ஆளும் நேபாள காங்கிரஸ் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இக்கட்சியைச் சேர்ந்த ஷேர் பகதுார் துபா மீண்டும் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (2)

Milirvan - AKL,நியூ சிலாந்து
26-நவ-202210:19:20 IST Report Abuse
Milirvan நேபாளம் பாரதத்துடன் இணைந்து மாநிலமாக இருக்க விழைந்தபோது வேண்டாமென்று மறுதலித்து இன்று சீனன் கைப்பாவையாக மாற வித்திட்ட மாகானுபவர் யார் என்று தெரியுமா....
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
26-நவ-202206:25:12 IST Report Abuse
NicoleThomson இவர் இந்தியாவிற்கும் ஸ்பெஷல் என்று பிஸ்கட் கொடுப்பார் , சீனாவிடமும் கொஞ்சி .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X