மும்பை: யெஸ் பேங்க் மோசடி வழக்கில் அதன் நிறுவனரான ராணா கபூருக்கு டில்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த, 'யெஸ் பேங்க்' நிறுவனர் ராணா கபூர், 'தீவான் ஹவுசிங் பைனான்ஸ்' நிறுவனர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர், 5,000 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, அமலாக்கத் துறை, தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக ராணா கபூர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
![]()
|
இதேபோல் தீவான் ஹவுசிங் பைனான்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த வாத்வான் சகோதரர்கள், முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த வழக்கு, யெஸ் பேங்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
சி.பி.ஐ. தொடர்ந்த இந்த வழக்கில் கடந்த செப்டம்பரில் ராணாகபூர் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் ராணா கபூர் ஜாமின் கோரி டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ராணாகபூருக்கு ஜாமின் வழங்கி னார்.
Advertisement