5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 5 தோப்புக்கரணம் தண்டனையாம்!

Added : நவ 26, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
பாட்னா: பீஹாரில், 5 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த நபருக்கு, ஐந்து முறை தோப்புக்கரணம் போடச் சொல்லி, கிராம பஞ்சாயத்தார் விதித்த தண்டனை, பயங்கர கண்டனங்களுடன் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.5 வயதுபீஹார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் சாக்லேட் தருவதாகக் கூறி, 5 வயது பெண் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஊர் மக்கள் அவரை பிடித்து,
Bihar, Girl child, Pocso, தோப்புக்கரணம், தண்டனை, பீஹார், பெண் குழந்தை, போக்சோ, 5 year old girl, Punishment, Situps, 5 வயது சிறுமி, Thoppukaranam,

பாட்னா: பீஹாரில், 5 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த நபருக்கு, ஐந்து முறை தோப்புக்கரணம் போடச் சொல்லி, கிராம பஞ்சாயத்தார் விதித்த தண்டனை, பயங்கர கண்டனங்களுடன் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



5 வயது


பீஹார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் சாக்லேட் தருவதாகக் கூறி, 5 வயது பெண் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஊர் மக்கள் அவரை பிடித்து, பஞ்சாயத்து தலைவர் முன் நிறுத்தியுள்ளனர்.


ஆனால், பஞ்சாயத்தார், குற்றவாளிக்கு தண்டனையாக வெறுமனே ஐந்து முறை தோப்புக்கரணம் போடச் சொல்லியுள்ளனர். அவரும், ஐந்து முறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.


latest tamil news

இது குறித்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில், ஆத்திரமடைந்த பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை, மாநில முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.



நடவடிக்கை


இந்நிலையில், ''குற்றவாளி மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ''இச்சம்பவத்தை மூடி மறைக்க நினைத்தவர்கள் குறித்தும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,'' என எஸ்.பி., கவுரவ் மங்களா தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (25)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-நவ-202218:14:00 IST Report Abuse
J.V. Iyer அதையும் வேறு யாரைவிட்டாவது செய்ய சொல்லி இருக்கலாமே? பிஹாரும் ஒரு இருளகம் ஆகி விட்டது.. வேறு என்ன சொல்ல
Rate this:
Cancel
26-நவ-202215:41:39 IST Report Abuse
அப்புசாமி நீதித்துறை மக்களிடம் செல்க வேண்டும்னு பேசிட்டு போயிட்டார் ஒரு நீதிபதி. அவர் இது மாதிரி செய்தியெல்லாம் படிக்க நேரமில்லை போலிருக்கு.
Rate this:
Cancel
Keshavan.J - Chennai,இந்தியா
26-நவ-202213:02:33 IST Report Abuse
Keshavan.J இதையெல்லாம் பார்க்கறது நம் தலையெழுத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X