வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத்தில் கலவரக்காரர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த 22 ஆண்டுகளாக மாநிலத்தில் அமைதி நிலவி வருகிறது எனக்கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தின் மதுதா நகரில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது; கடந்த1995க்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது, ஜாதிக்கலவரம் பரவலாக நடக்கும். பல்வேறு சமுதாயம் மற்றும் ஜாதிகளை சேர்ந்தவர்களை மோதலில் ஈடுபட காங்கிரஸ் தூண்டிவிடும்.
இது போன்ற கலரங்கள் மூலம் காங்கிரஸ் ஓட்டுவங்கியை தக்க வைத்து கொண்டதுடன், சமூகத்தில் பெரும்பான்மையான சமூகத்திற்கு அநீதி இழைத்துள்ளது.

பரூச் பகுதியில் ஏராளமான கலவரங்கள், வன்முறைகள், ஊரடங்கு ஆகியவை நடந்துள்ளன. இது போன்ற குழப்பங்கள் காரணமாக குஜராத்தில் வளர்ச்சி இல்லாமல் இருந்தது. கடந்த 2002லும் மதக்கலவரத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால், சிறையில் அடைத்து, அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.
கடந்த 22 ஆண்டுகளில் வன்முறையால் எந்த ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அடிக்கடி கலவரம் நடக்கும் மண்ணில், அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.