திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் தேர்தலில் மூன்று வார்டுகளில் மட்டுமே அதிமுகவினர் வெற்றி பெற்றனர். மூவரும் தொடர்ந்து மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இதைடுத்து நோட்டீஸ் அனுப்பியதால் 31 வது வார்டு கவுன்சிலர் அமுதா கூட்டங்களில் கூட்டங்களில் பங்கேற்றார். இரண்டாவது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி, 30 வது வார்டு கவுன்சிலரும் அதிமுக முன்னாள் துணைமேயருமான ஜெகநாதன் ஆகியோரையும் பதவி நீக்கம் தீர்மானம் ஏற்கனவே கொண்டுவரப்பட்டது.
கோர்ட் நடவடிக்கையால் தள்ளிப்போனது. நவம்பர் 30ல் நடக்க உள்ள மாநகராட்சி கூட்டத்தில் மாஜி துணைமேயர் ஜெகநாதன் மற்றும் முத்துலட்சுமி ஆகியயோரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்படுகிறது.