‛‛எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்'': சீனாவில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்

Updated : நவ 27, 2022 | Added : நவ 26, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
பீஜிங்: சீனாவின் மேற்கு ஷிண்ஜியாங் மாகாணத்தில், கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.சீனாவில் தொடர்ந்து கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. 'ஜீரோ கோவிட் கொள்கை' கடைபிடிக்கும் அரசு, அங்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்நாட்டின்
china, covid, lockdown, covid19,slogan, Xinjiang, people, சீனா, கோவிட், ஊரடங்கு, கோவிட்19, கட்டுப்பாடுகள்,

பீஜிங்: சீனாவின் மேற்கு ஷிண்ஜியாங் மாகாணத்தில், கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.


சீனாவில் தொடர்ந்து கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. 'ஜீரோ கோவிட் கொள்கை' கடைபிடிக்கும் அரசு, அங்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.


அந்நாட்டின் மிகப்பெரிய மாகாணமான ஷின்ஜியாங் மாகாணத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 40 லட்சம் பேர் வசிக்கும் உரும்கி நகரில் வசிக்கும் மக்கள் கடந்த 100 நாட்களாக வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர்.


இங்கு மட்டும் கடந்த 2 நாட்களாக 100க்கும் மேற்பட்டவர்கள் கோவிட் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இச்சூழ்நிலையில், இங்கு கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருதி உயிரிழந்தனர். 8 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த கட்டடத்திலும் கட்டுப்பாடுகள் காரணமாக பல பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், தீவிபத்து ஏற்பட்ட போது, மக்கள் வெளியே முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதனால் கோபமடைந்த இப்பகுதியினர், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வாருங்கள்; ஊரடங்கில் இருந்து விடுபட விரும்புகிறோம். எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என கோஷம் எழுப்பினர். அப்போது அந்நாட்டின் தேசிய கீதத்தையும் ஒழிக்க விட்டனர். இது குறித்த வீடியோக்கள் அந்நாட்டின் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


latest tamil news

சீன அரசின் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக, காங்சாவோ நகர மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது, எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றால், நாங்கள் இறக்கவும் தயார் என்று கோபத்துடன் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (10)

27-நவ-202210:10:11 IST Report Abuse
அப்புசாமி கம்யூனிஸ்ட் நாட்டில் சுதந்திரமா? உதைதான் வாழும். போய் வீட்டில் முடங்குங்க.
Rate this:
Cancel
Najumudeen -  ( Posted via: Dinamalar Android App )
27-நவ-202206:38:14 IST Report Abuse
Najumudeen 0 .........
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
26-நவ-202223:31:45 IST Report Abuse
g.s,rajan Only revolution could change the current atrocities in China. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X