குடியாத்தம்: குடியாத்தம் அருகே, ஆந்திராவுக்கு கடத்த பதுக்கிய ஒரு டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் வருவாய்த்துறையினர், ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அதில், குடியாத்தம் அருகே பரதராமியில், சாலையோரம் முள்புதரில் பதுக்கி வைத்திருந்த, ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆந்திரா மாநிலம், சித்துாருக்கு கடத்த பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.