நாமக்கல்:''தமிழக கவர்னர் விரைவில் 'ஆன்லைன்' சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் தருவார்,'' என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், அரசு சட்டக்கல்லுாரி மற்றும் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் கூறியதாவது:
'
ஆன்லைன்' சூதாட்டத்தை, இந்திய அளவில் தடை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பரிசீலனை செய்வதாக, மத்திய சட்ட அமைச்சர் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் 'ஆன்லைன்' சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்ட மசோதா, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரின் விளக்கத்துக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தடை சட்டத்துக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கவர்னரை சந்திக்கவும் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.