சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிக்கை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28 ம் தேதி முதல் டிச.,31 வரை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பண்டிகை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் காலை 10: 30 மணி முதல் மாலை 5: 15 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.