மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம்: ஜெய்சங்கர்

Updated : நவ 26, 2022 | Added : நவ 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த பல நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.கடந்த 2008 ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் இன்று(நவ.,26) அனுசரிக்கப்படுகிறது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர், முதல்வர், அமைச்சர்கள்
mumbai, jaishankar, terror, attack, foreign minister, mumbai attack, மும்பை, பயங்கரவாத தாக்குதல், ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சர்,

புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த பல நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


latest tamil news

கடந்த 2008 ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் இன்று(நவ.,26) அனுசரிக்கப்படுகிறது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பொது மக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.


latest tamil news

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில்,


latest tamil news

இந்த தருணத்தை , நாடு முழுவதும் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். இதை நாங்கள் கடுமையாக உணர்கிறோம் நீதியின் நடவடிக்கைகளை விரைந்து முடிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை எடுத்து கூற விரும்புகிறேன்.


இன்று மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும், இந்த தாக்குதலை திட்டமிட்டவர்கள், இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த பல்வேறு நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருகிறது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (2)

M Ramachandran - Chennai,இந்தியா
26-நவ-202219:38:07 IST Report Abuse
M  Ramachandran கோழைகளே..அது அவர்கள் உடம்புடன் பிறந்தது மாற்றி கொள்ளா எண்ணமில்லை . இந்த கழிசடைய்யகள் உழலைத்து பிழலைக்க எண்ணமில்லை. பிறர் உயர்வதை கண்டு இந்த கீழ்த்தரமான வேலை கலை ய்ய செய்து எத்தி பிழைக்கும் கீழ் தரமான கும்பல். இதைய்ய அவர்கள் நம்பும் இயறைவனும் யேற்க மாட்டார். நமச்சல் எடுத்த தலைவர் என்ற பண்ணி சொல்வதை கேட்கும்கரையை கூலிக்கு மாரடிக்கும் கும்பல் . . .
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
26-நவ-202219:31:24 IST Report Abuse
M  Ramachandran அதற்க்கு உடந்தையாக இருந்த மும்பை சேர்ந்த கஜங்கர்ஸ் பெயருடன் ஒட்டி கொண்டிருந்த பெரிய அரசியல் தலையே காரணம் . குற்றாவாளியய் நெருங்க விடாமல் செய்த நமது இந்திய உளவு ஸ்தாபனத்யே உள்ளூர் போலீசை வைத்து மிரட்டி அந்த தீவிரவாதி கும்பலுக்கும் அடிக்கடி தகவல் கொடுத்து கொண்டிருந்த நாசகார எண்ணமுடைய அந்த ஆள் தான் காரணம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X