சரவணம்பட்டி:வேடபட்டியில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் குடியிருப்பவர் உமா, 32. 2020ல் 'மேட்ரிமோனியல்' வழியாக, வடவள்ளியை சேர்ந்த கருணாநிதி மகன் பார்த்திபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வரதட்சணையாக, 42 பவுன் நகை, 15 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளார்.
கணவர் பார்த்திபன், பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதை அறிந்தார்.
பல பெண்களை வைத்து, விபசார விடுதி மற்றும் ஸ்பா நடத்தி வந்துள்ளதையும் அறிந்தார். இதுதொடர்பாக, வடவள்ளி போலீசில் புகார் தெரிவித்தார். நடவடிக்கை இல்லாததால், போலீஸ் கமிஷனரை சந்தித்து, உமா புகார் தெரிவித்தார்.
அதனால், ஆத்திரமடைந்த பார்த்திபன், அவருக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாகவும் மற்றுமொரு புகாரை, சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தார்.
அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பார்த்திபன், தற்போது மத்திய சிறையில் உள்ளார்.