கோவை:கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, டிச., 4ல் நடக்கிறது. இதற்கு, 10 மையங்கள் அமைக்கப்படுகின்றன.
கோவை மாவட்ட வருவாய்த்துறையில், காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, டிச., 4ல் எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் மொத்தம், 10 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இணைய வழியில் விண்ணப்பித்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், எழுத்துத்தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச்சீட்டு, அவர்களது மொபைல் எண் அல்லது இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.